வாய்க்கால் குறுக்கே பாலம் இல்லாததால் விவசாயிகள் திண்டாட்டம்

Added : மே 11, 2020
Share
Advertisement
கரூர்: வாய்க்கால் குறுக்கே பாலம் இல்லாததால், விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர். கரூர் மாவட்டம், காவிரிக்கரையோரம் வாய்க்கால் பாசனம் மூலம் தண்ணீர் வசதி பெறுகிறது. இதில், புகழூர் வாய்க்கால் மூலம், 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி வசதி பெறுகின்றனர். இந்த வாய்க்கால் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே காரணாம்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே

கரூர்: வாய்க்கால் குறுக்கே பாலம் இல்லாததால், விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர். கரூர் மாவட்டம், காவிரிக்கரையோரம் வாய்க்கால் பாசனம் மூலம் தண்ணீர் வசதி பெறுகிறது. இதில், புகழூர் வாய்க்கால் மூலம், 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி வசதி பெறுகின்றனர். இந்த வாய்க்கால் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே காரணாம்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து பிரியும். கரூர் மாவட்டத்தில் நொய்யல், நடையனூர், வேலாயுதம்பாளையம் வழியாக வாங்கல் சென்று அங்கு வாய்க்கால் பெரும்வாய்க்காலுடன் இணைகிறது. இங்கு, 30 கி.மீ. தூரம் செல்லும் வாய்க்காலால், வெற்றிலை, வாழை, கரும்பு, நெல், கோரை, மரவள்ளிக்கிழங்கு போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்த வாய்க்கால் குறுக்கே, பெரும்பாலான இடங்களில் பாலம் இல்லாததால், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். உரம் உட்பட விவசாய பொருட்களை எடுத்து வர பல கிலோ மீட்டர் தூரம் சுற்ற வேண்டி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாய்க்காலில், தண்ணீர் அதிகளவில் திறக்கப்படும்போது, மறுகரையில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: புகழூர் வாய்க்காலில் பாலம் இல்லாததால், பலநேரங்களில் தண்ணீருக்குள் நீந்தியபடி இடு பொருட்களை எடுத்துச் செல்கிறோம். மேலும், மறுகரையில் விவசாய நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட கோரையையோ, வெற்றிலை, நெல் உள்ளிட்ட பொருட்களை ஊருக்குள் கொண்டு செல்ல திண்டாட வேண்டியுள்ளது. எனவே, வேலாயுதம்பாளையம், நொய்யல், புஞ்சைகடம்பங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X