தடை நீக்கிய பகுதியில் வரும் 13 முதல் கடை திறப்பு: பாதுகாப்புடன் வணிகம் தொடர வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடை நீக்கிய பகுதியில் வரும் 13 முதல் கடை திறப்பு: பாதுகாப்புடன் வணிகம் தொடர வேண்டுகோள்

Added : மே 11, 2020
Share

நாமக்கல்: 'கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில், தடை நீக்கப்பட்டு, வரும், 13 முதல் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில், விதிமுறைகளை கடைபிடித்து, பாதுகாப்புடன் வணிகம் தொடர வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் நகரில், கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்டாலும், ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகள், மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை, செயல்பட தடை விதிக்கப்படுகிறது. மேலும், பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், காய்கறி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலம் நீக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, பிற பகுதிகளுக்கு வழங்கப்பட்டது போல், மூன்று வண்ண அனுமதி சீட்டு வழக்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மட்டுமே, பொதுமக்கள் பொருட்கள் வாங்க வெளியே வரலாம். ஏற்கனவே, மாவட்ட கலெக்டர், வணிக நிறுவன செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட ஊரடங்கு தளர்வு, தற்போது, தடை நீக்கப்பட்ட பகுதிகளுக்கும் பொருந்தும். தடை செய்யப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, தடுப்புகள் அமைத்து, சமூக இடைவெளி விட்டு, வரும், 13 முதல், திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 'பிடில் முத்து தெரு மற்றும் பாவடி தெரு ஆகிய பகுதிகள், வரும், 14 வரை, தொடர்ந்து கட்டுப்பாட்டு மண்டலமாக செயல்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை கடைபிடித்து, பாதுகாப்புடன் வணிகம் தொடர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X