கொல்லிமலை: கொல்லிமலையில், நெல் அறுவடை பணி தொடங்கியதுள்ளது. கொல்லிமலை வனப்பகுதியில் மிளகு, அன்னாசி, வாழை, கிழங்கு ஆகியவை அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. இருப்பினும், மழை காலத்தில் வரும் ஓடை நீரை வைத்து, நெல் பயிரும் நடவு செய்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பே, ஆறு, ஓடையோரங்களில் உள்ள விவசாயிகள் நெல் நட்டு வருகின்றனர். அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் பருவமழையால், இப்பகுதியில் உள்ள அனைத்து நீரோடைகளிலும் தண்ணீர் நிற்காமல் செல்லும்; இதை பயன்படுத்தி நெல் விதைக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு நெல் நட்ட விவசாயிகள், தற்போது அறுவடையை தொடங்கியுள்ளனர். இயந்திரம், டிராக்டர் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக நெல் பயிரை அறுத்து, சாலைகளில் போட்டு, மாடுகள் மூலம் நெல்லை பிரித்து எடுக்கின்றனர். இதை தாம்படிப்பது என்று கூறுகின்றனர். அவ்வாறு பிரிக்கப்பட்ட நெல்லை, சாலையிலேயே கொட்டி காய வைத்து உமியை பிரிக்கின்றனர். தற்போது, கொல்லிமலையில் பல பகுதிகளில் நெல் அறுவடை தொடங்கியுள்ளது. பெரும்பாலும் இப்பகுதியில் விளையும் நெல்லை, தங்களது உணவுக்குதான் பயன்படுத்திக்கொள்கின்றனர். வெளியே விற்பது இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE