இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Added : மே 11, 2020
Share
நாமக்கல்: நாமக்கல்லில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்கும் விதமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நகர எல்லை பகுதிக்குள் இறைச்சி கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நகரில் இருந்து, 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள காவேட்டிப்பட்டி, முதலைப்பட்டி பைபாஸ், கொண்டிசெட்டிப்பட்டி பகுதிகளில், 51 இறைச்சி

நாமக்கல்: நாமக்கல்லில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்கும் விதமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நகர எல்லை பகுதிக்குள் இறைச்சி கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நகரில் இருந்து, 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள காவேட்டிப்பட்டி, முதலைப்பட்டி பைபாஸ், கொண்டிசெட்டிப்பட்டி பகுதிகளில், 51 இறைச்சி கடைகள் செயல்பட நகராட்சி நிர்வாகம் தற்காலிக அனுமதி அளித்து இருந்தனர். இங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக, கோடுகள் வரையப்பட்டு அதில் வரிசையாக நின்று இறைச்சி வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், சில கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், கூட்டம் கூட்டமாக இறைச்சி வாங்க நின்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் அறிவுறுத்தலை, மக்கள் அலட்சியப்படுத்தி இறைச்சி வாங்கி சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X