எருமப்பட்டி: எருமப்பட்டி வட்டாரத்தில், செயல்விளக்கதிடல் மண் மாதிரி எடுக்கும் பணி தொடங்கியது. எருமப்பட்டி வட்டாரத்தில், வேளாண்மைத்துறை மூலம், தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கம் மண்வள அட்டை வழங்கப்பட உள்ளது. இதில், சிவநாய்க்கன்பட்டி, கோனாங்கிப்பட்டி, தேவராயபுரம், மேட்டுபட்டி (அக்ரஹாரம்), பொம்மசமுத்திரம் ஆகிய ஐந்து கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி வேளாண்மை உதவி இயக்குனர் அன்புச்செல்வி தலைமையில் தொடங்கப்பட்டது. விவசாயிகளுக்கு, மண் பரிசோதனையின் அவசியம், பயன்கள் குறித்து கூறப்பட்டது. அதில், கோடை உழவு செய்யும் இம்மாதம், மண்மாதிரி எடுக்க ஏற்ற காலமாகும். மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி மே, 3க்குள் முடிக்கப்படும். தொடர்ந்து மண் பரிசோதனை மேற்கொண்டு மண்வள அட்டைகள் வழங்கப்படும். அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளில், உரங்களை முறையாக பயன் படுத்தி பயிர் சாகுபடி செய்து, அதிக மகசூல் எடுத்து பயனடையலாம் என அன்புச்செல்வி கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் வட்டார வேளாண்மை அலுவலர், மோகனபிரியா மற்றும் மண்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் மலர்கொடி, உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE