காய்கறி கடையில் விற்பனைக்கு வந்த சேனைக்கிழங்கில் பூ பூத்த அதிசயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி கடையில் விற்பனைக்கு வந்த சேனைக்கிழங்கில் பூ பூத்த அதிசயம்

Added : மே 11, 2020
Share

நாமக்கல்: நாமக்கல் காய்கறி கடைக்கு, விற்பனைக்காக வந்த சேனைக்கிழங்கு அதிசயத்தக்க வகையில் பூ பூத்தது. நாமக்கல்லில், கொரோனா தோற்று பாதிப்பு பகுதியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளதால், அப்பகுதி உள்ளிட்ட, 12க்கும் மேற்பட்ட தெருக்கள் மாவட்ட நிர்வாகத்தால் 'சீல்' வைக்கப்பட்டன. அதனால், அப்பகுதியில் அனைத்து கடைகளும் மூடியிருந்தன. நீண்ட இடைவெளிக்கு பின், நேற்று பல தெருக்கள் தளர்வுபடுத்தப்பட்டு, அங்கு அடைக்கப்பட்டுள்ள இரும்பு தகடுகள் அகற்றப்பட்டன. பஸ் ஸ்டாண்ட் அருகே, ஏராளமான காய்கறி கடைகள் உள்ளன. அவைகளை விரைவில் திறப்பதற்கான பணி நடந்து வருகிறது. அங்கு செயல்பட்டு வந்த, காய்கறி கடைக்காக அதன் உரிமையாளர் சாந்தி, பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்தார். அவ்வாறு வரவழைக்கப்பட்ட சேனைக்கிழங்குகள் பூ பூத்து காணப்பட்டது. அதை அருகில் இருந்த கடைக்காரர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.


இதுகுறித்து சாந்தி கூறியதாவது: நீண்டநாள் கழித்து, வியாபரத்திற்காக காய்கறி வாங்கினோம். அதில் சேனைக்கிழங்கு மூட்டையில் இருந்த பெரும்பாலன கிழங்குகள் பூ பூத்து காணப்பட்டன. கொரோனா ஊரடங்களால், மொத்த வியாபாரிகள் காய்கறிகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கலாம். நீண்ட நாளானதால் அதில் பூ பூத்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X