பொது செய்தி

தமிழ்நாடு

மஹாராஷ்டிராவில் பணியாற்றி திரும்பிய 13 பேர் பள்ளியில் தங்கவைப்பு

Added : மே 11, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதையடுத்து மார்ச், 24 முதல், வரும், 17 வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக, தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப விருப்பப்பட்டனர். இதையடுத்து, மத்திய அரசு, ரயில்வே துறை மூலம், தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றி வந்த, தமிழகத்தை சேர்ந்தவர்கள், சிறப்பு ரயில் மூலம் நேற்று திருச்சி வந்தனர். அவர்கள், பஸ்கள் மூலம், பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர், பந்தல்பூர், ஓஸ்னா பாத் ஆகிய பகுதியில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பெண்கள், எட்டு ஆண்கள் என, மொத்தம், 13 பேர், சிறப்பு ரயில் மூலம், திருச்சி ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தனர். அவர்களை, அங்கிருந்து, பஸ் மூலம் நாமக்கல் அடுத்து வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத் துறை மூலம், ஜிங்க், வைட்டமின் 'பி' காம்ப்ளக்ஸ் மற்றும் ஹோமியோபதி மருந்துகள் அடங்கிய 'கிட்' வழங்கப்பட்டுள்ளன. அவர்களில், மோகனூர், ப.வேலூர், சேந்தமங்கலம் மற்றும் திருச்செங்கோட்டில் தலா, ஒன்று, குமாரபாளையம் மூன்று, ராசிபுரம், நான்கு மற்றும் நாமக்கல் தாலுகாவில், இரண்டு பேர் என, மொத்தம், 13 பேர் அடங்குவர். அங்கு சென்ற கலெக்டர் மெகராஜ், அவர்களுக்கு, தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X