மாவட்டம் முழுவதும் இதுவரை விதிமுறை மீறிய 6,768 பேர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டம் முழுவதும் இதுவரை விதிமுறை மீறிய 6,768 பேர் கைது

Added : மே 11, 2020
Share

நாமக்கல்: தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில், விதிமுறை மீறி இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை போலீசார் கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும், நேற்று போலீசார் நடத்திய சோதனையில், ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக, 24 வழக்குப் பதிந்து, 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை, ஊரடங்கு உத்தரவை மீறியதாக, 6,231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,768 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3,620 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், இதுவரை, 1,951 வாகனங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X