சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரியாற்றில் மணல் திருட்டு: மூன்று மாட்டு வண்டி பறிமுதல்

Added : மே 11, 2020
Share
Advertisement

மோகனூர்: மோகனூர் அடுத்த குன்னிபாளையத்தில், அரசு மணல் குவாரி செயல்படுகிறது. தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக, மணல் குவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், திருட்டுத்தனமாக ஆற்றில் மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. அவற்றை போலீசாரும் அவ்வப்போது ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்ளை கைது செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர். இந்நிலையில், மோகனூர் அடுத்த பாலப்பட்டி காவிரி ஆற்றில் அனுமதியின்றி, மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக, நாமக்கல் எஸ்.பி., அருளரசுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் படி, மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில், போலீசார் நேற்று மாலை, 5:00 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக, மூன்று மாட்டு வண்டியில் மணல் திருடி செல்வதை கண்டுபிடித்தனர். போலீசாரை பார்த்ததும், மாட்டு வண்டியில் வந்தனர்கள் இறங்கி அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகினர். மணலுடன், மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக, வழக்குப் பதிந்து, தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X