சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லில் 2 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

Added : மே 11, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் அருகே, தும்மங்குறிச்சி மேலப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன், 27. இவரது குடிசை வீடு நேற்று காலை, 7:00 மணி அளவில் திடீரென தீப்பற்றி கொண்டது. வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர். தீ மளமளவென அருகில் உள்ள, அவரது மற்றொரு குடிசைக்கும் பரவியது. இது குறித்து, அப்பகுதி மக்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையில், விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் தண்ணீர் பீச்சியடித்து அணைத்தனர். இரு குடிசையிலும் மேற்கூரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த பொருட்கள், பணம், நகை எரிந்து சேதமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என, தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X