பொது செய்தி

தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை மே 16ல் துவங்க வாய்ப்பு

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னைவானிலைமையம், தென்மேற்குபருவமழை,  மழை, வெப்பச்சலனம், வளிமண்டலம், மாவட்டங்கள், South West monsoon, Skymet, Meteorological Department, monsoon, chennai, MET office, TN news, Tamil Nadu,  India, Andaman, Chennai Meteorological Department

சென்னை: மே 16 ல் தென் மேற்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் மே 13ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். அந்தமான் நிகோபார் பகுதியில் வரும் 16 ல் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.


latest tamil news


தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் , திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் திருத்தணியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும். சென்னையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
11-மே-202017:58:59 IST Report Abuse
Rameeparithi பருவ மழையே விரைவில் வர வாழ்த்துகிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X