தொழிலாளர்களின் உரிமையை பாதுகாப்பதில் சமரசமில்லை: ராகுல்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
Congress, Rahul Gandhi, Politics, dilution of labour laws, Labour Laws,migrant Workers, Stifle Voices, politician, opposition,  economy, President, India, Ram Nath Kovind, காங்கிரஸ், ராகுல், தொழிலாளர், சட்டம், ராகுல்காந்தி

புதுடில்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குரலை நசுக்குவதற்கு காரணமாக அமைந்து விட கூடாதென காங்., எம்.பி., ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சில மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்ததாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். உ.பி., ம.பி., குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட உ.பி.,யில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் நிறுத்தி வைப்பதாக அதிரடி முடிவை அறிவித்துள்ளது.


latest tamil news


இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் ஹிந்தியில் பதிவிட்டுள்ளதாவது: தொழிலாளர் சட்டங்கள் பல மாநிலங்களால் திருத்தப்படுகின்றன. கொரோனா தொற்றுக்கு எதிராக நாங்கள் ஒன்றாக போராடுகிறோம். ஆனால் இது மனித உரிமைகளை மிதிப்பதற்கும், பாதுகாப்பற்ற பணியிடங்களை அனுமதிப்பதற்கும், தொழிலாளர்களை சுரண்டுவதற்கும் அவர்களின் குரல்களை அடக்குவதற்கும் அனுமதிக்க முடியாது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அடிப்படைக் கொள்கைகளில் நாங்கள் சமரசம் செய்ய முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
11-மே-202019:33:05 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இந்த மாதிரி பெனாத்து பவர்களுக்கு அர்னாப் கோஸ்வாமி தான் சரியான ஆளு.. அவரை பார்த்தாலே ராவுளு பம்முவாறு கேட்ட கேள்விக்கு வாயில் வார்த்தையே வராது.. அங்கிட்டு இங்கிட்டு கண்பார்வையை வீசுவார் .. பயமோ பயம்.. இவரு ஒளர ஒளர மோடிக்கு ஜெயம்..வெற்றி நிச்சயம்
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
11-மே-202019:29:06 IST Report Abuse
Rameeparithi தொழிலாளர் உரிமையை பெரும் அரசியல் முதலாளி பேசுவது தான் சூப்பர் காமடி அறுபது வருஷம் ஆட்சி செய்து உரிமையை கொடுக்காத காங்கிரஸ் வெற்று கூவல் விடும் வேலையை விட்டுவிட்டு ஏதாச்சும் உருப்படியா செய்ய யோசிக்கணும்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
11-மே-202019:23:04 IST Report Abuse
RajanRajan குரானா, பப்புவின் மொத்த அரசியல் வாழ்க்கையையும் சிதற அடிச்சுட்டு. என்ன பேசுவது எப்படி பேசுவதுனு பப்பு ரொம்பவே குழம்பி போய்ட்டான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X