பொது செய்தி

இந்தியா

முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: ஊரடங்கில் அடுத்து என்ன?

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (38+ 29)
Share
Advertisement
ஊரடங்கு, கொரோனா, கொரோனாவைரஸ், பொருளாதாரம், 
 இந்தியா, பிரதமர்மோடி, வீடியோகான்பரன்சிங், ஆலோசனை, முதல்வர்கள், Prime Minister, PM Modi, Narendra Modi, Chief Minister, Indian states, India, video conferencing, lockdown, lockdown extension, lockdown relaxation, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases

:புதுடில்லி : ஊரடங்கிற்கு பின் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 24 ம் தேதியில் இருந்து அமலில் உள்ளது. மூன்று முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மே 17 ல் முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பணிகள் தவிர, மற்ற அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது.


latest tamil news



வரும் 17 ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், கொரோனா பாதிப்பு குறையவில்லை. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். 5வது முறையாக இந்த கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடக்கும் என தெரிகிறது.

இந்த கூட்டத்தில் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் எனக்கூறப்படுகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதும் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (38+ 29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
12-மே-202013:26:35 IST Report Abuse
konanki குண்டு வைக்க, ராணுவம்/போலிஸ் மீது கல் எறிய , உடல் பாகங்களில் தங்கம் கடத்த , ஹவாலா தொழில் செய்ய, கள்ள இந்திய ரூபாய் நோட்டுகள் அடிக்க இதுக்கு வாங்கின உங்க பணமெல்லாம் பனி முதல் செய்ஞ்சு கொரோனா நிவாரண தத்துக்கு பயன்படுத்தறாங்க தெண்டம்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
12-மே-202013:21:48 IST Report Abuse
konanki கோயில் அழகிய யானய தான் ஊர்வலம் உடுவாங்க.
Rate this:
Cancel
11-மே-202020:20:19 IST Report Abuse
ஆப்பு இவுரு கூட்டி கலந்தாலோசித்து ஒரு முடிவு சொல்றதுக்குள்ளாற எங்க ஊர்ல இன்னிக்கி சாயங்காலமே எல்லாக் கடைகளும் திறக்கப் பட்டு ஊரே ஜே..ஜே..ந்னு களை கட்டியாச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X