பொது செய்தி

இந்தியா

468 ரயில்களில் தொழிலாளர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்: பியூஷ் கோயல்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Railway Minister, Piyush Goyal, Migrant workers, Trains, special train, Shramik Special trains, Departed, Railway ministry, lockdown, travel ban, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, lockdown relaxation, lockdown extension, புலம்பெயர்ந்த, தொழிலாளர்கள், ரயில்வே, அமைச்சர், பியூஷ்கோயல்

புதுடில்லி: இதுவரை 468 ரயில்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், அவர்களை சொந்த ஊருக்கு ரயில் மூலம் அழைத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, ரயில்களில் கூட்டி செல்லப்படுகின்றனர்.
இது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்று காலை சிறப்பு ரயில்கள் நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன். தொழிலாளர்களை அழைத்து செல்ல முதல் நாளான மே 1ல் 4 ரயில்கள் இயக்கப்பட்டு, நேற்று (மே 10) 101 ரயில்கள் என்ற எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. இதுவரையில் 468 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.


latest tamil news


சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்து செல்வதற்கான ஒப்புதல்களை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளிடமும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். தினமும் 300 ரயில்கள் வீதம் 1,200க்கும் மேற்பட்ட ரயில்களை நாங்கள் ஒதுக்கியுள்ளோம். இதனால் புலம்பெயர்ந்தோர் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு பாதுகாப்பாகவும் விரைவாகவும் வசதியாகவும் செல்ல முடியும். 250க்கும் மேற்ப்பட்ட ரயில்களுக்கு ஒப்புதல் அளித்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், 140 ரயில்களுக்கு ஒப்புதல் அளித்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார், 215 ரயில்களுக்கு ஒப்புதல் வழங்கிய குஜராத் முதல்வர் விஜய்ரூபானி ஆகியோருக்கு நன்றி. இது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரிதும் உதவும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பால சுப்ரமணியன் அ வடக்கே உள்ள மாகாணங்களுக்கு இது ஓர் படிப்பினையாக இருக்கும். அங்கே பிழைப்பதற்கு வழி இல்லாமல் தான் தொழில் தேடி இலட்சக்கணக்கானவர்கள் தெற்கே வந்து உழைக்கிறார்கள். இப்போதாவது மனம் திருந்தி ஜாதி சமய அரசியலில் இருந்து விடுபட்டு நல்லவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் ஆட்சியை கொடுங்கள். வெரும் பேச்சு உதவாது.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-மே-202016:43:41 IST Report Abuse
ஆரூர் ரங் ஊருக்குத் திருப்பிப்.போற பெங்காலி அங்கேயும் பிழைக்க வழியில்லைனு கொத்தடிமயா போவான். இல்லாட்டி தமிழகத்துக்கே திரும்பி வர ப்ரோக்கரிடம் கெஞ்சுவான். சென்டிமென்ட் நாட்டைக் கெடுக்க்குது
Rate this:
Cancel
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
11-மே-202015:53:37 IST Report Abuse
sankaran vaidyanathan கொரோனா தொற்று நோயுடன் வாழ கற்று கொள்ளுங்கள் என்று இப்பொழுது மத்திய அரசு கூறுவதாக செய்திகள் வருகின்றன இதனை புது தில்லி முதல் அமைச்சர் ஏற்கனவே சொல்லிவிட்டார் .மத்திய சுகாதார அமைச்சகம் சமூக விலகல் தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளது அப்படியானால் இவ்வளவு நாட்கள் கட்டுப்பாடுகள் விதித்து மக்களை கட்டுப்படுத்தியது ஏன்? வேலை இல்லை வருமானம் இல்லை பிழைக்க வழி இல்லை உண்ண உணவு இல்லை போக்குவரத்து இல்லை புலம் பெயர்ந்தோர் வாழ வழி இல்லாமல் சொந்த ஊர் செல்ல நடை வழி பயணம் செய்து ஆங்காங்கு படுத்து உறங்கி விண்ணுலகம் எட்டியது நீதியா, படிப்பினையா இந்தியா ஒரே நாடு இல்லை பல்வேறு மன்னர்கள் அரசோச்சிய பிரதேசம் அதனால் அவதி படுங்கள் என்ற சொல்லாமல் செயல் படுகிறார்கள் போலும் நிர்வாகம் அரிது அரிது மனிதராய் பிறத்தல் அரிது .மனித நேயம் எங்கே மறைந்தது தொற்று நோய் உடனா
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-மே-202016:13:17 IST Report Abuse
Janarthananஅதன் தாக்கத்தை குறைக்க /விழிப்புணர்வை ஏற்படுத்த , இப்பொழுது விழிப்போடு வாழுங்கள் என்று தான் சொல்லுகிறர்கள் விழிப்போடு இருப்பவன் புழைத்து கொள்ளுவான் விழ்ப்புணர்வு இல்லாமல் விட்டு இருந்தால் அமெரிக்கா ஐரோப்பா போல் ஆகி இருக்கும்??? ஏன் புரிய மாட்டுகிறது உங்களை படித்த அறிவாளிகளுக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X