தவறை சரிசெய்யுங்கள்: அமெரிக்காவின் விசா விதிமுறையால் சீனா கோபம்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Correct Your Mistake, China, America, US Rule, Chinese Reporters, journalist, counter measures, Beijing, Trump, Donald Trump, தவறை சரிசெய்யுங்கள், அமெரிக்கா, சீனா, ஊடகவியலாளர்கள், நிருபர்கள், விசா, விதிமுறை

பெய்ஜிங்: சீன ஊடகவியலாளர்களுக்கான விசாக்களை 90 நாள் காலத்திற்கு மட்டுப்படுத்தும் புதிய விதியை அமெரிக்கா கொண்டுவந்துள்ளதற்கு, தவறை உடனடியாக சரிசெய்யவில்லை எனில் எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னை தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், சீன ஊடகவியலாளர்களுக்கான விசாக்களை 90 நாள் காலத்திற்கு மட்டுப்படுத்தும் புதிய விதியை அமெரிக்கா கொண்டு வந்தது. இன்று (மே 11) முதல் இந்த விதிமுறை அமலுக்கு வந்தது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்கா, சீன ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறையை அதிகரிக்கிறது. நாங்கள் இதனை உறுதியாக எதிர்க்கிறோம்.


latest tamil news


அமெரிக்கா தனது தவறை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோருகிறோம். இல்லையெனில் எதிர் நடவடிக்கைகளை சீனா எடுப்பதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார். இரு நாட்டு ஊடகவியலாளர்கள் இடையேயான பிரச்னைகள் சில மாதங்களாக தொடர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில், அமெரிக்க செய்தித்தாள் நிறுவனத்தில் இருந்து மூன்று அமெரிக்க பத்திரிகையாளர்களை சீனா வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202020:02:16 IST Report Abuse
நக்கல் ஊடகம் ஒரு நீதிபதி போல நடுநிலையாக நின்று மக்களுக்கு உண்மையை சொல்லவேண்டும்... ஆனால், இன்று அந்த மாதிரி ஒரு ஊடகத்தை பார்ப்பது அரிது... யாருக்கு வேண்டும் உண்மை சொல்லாத ஊடகங்கள்... முக்கியமாக அமெரிக்காவில் உள்ள ஊடகங்கள் டிரம்புக்கு எதிராகவே வேலை செய்கின்றன... அதனால், இந்த விஷயத்தில் டிரம்ப் இறங்கி வரமாட்டார்.... அமெரிக்கா ஊடகங்கள் பெரிதாக புலம்புவதை கூடிய சீக்கிரம் பார்க்கலாம்...
Rate this:
Cancel
Sami Sam - chidambaram ,இந்தியா
11-மே-202019:43:25 IST Report Abuse
Sami Sam சீனாவிலிருந்து எந்த உண்மை செய்தியும் வராது அப்படி வந்தாலும் அதில் பாதி பொய் ஆனால் மற்ற உலகநாடுகளின் எல்லா செய்திகளையும் சீனா தெரிந்து கொள்ளவேண்டும் இதன் பெயர் கம்யூனிசமா
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
13-மே-202013:49:07 IST Report Abuse
dandyகட்டுமரம் காலையில் சொல்லியதை மாலையில் தான் அப்படி சொல்லவில்லை என்று மறுத்ததை விடவா ?...
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
11-மே-202019:39:24 IST Report Abuse
blocked user சீனா தனது ஊடகவியலாளர்களுக்கு வெளிநாட்டில் உள்ள செய்திகளை சேகரிக்கும் பொழுது மட்டும் சுதந்திரம் வேண்டும் என்கிறது - ஆனால் அதே சமயம் வெளிநாட்டு நிருபர்களை மிகக்கேவலமாக நடத்துகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X