தவறை சரிசெய்யுங்கள்: அமெரிக்காவின் விசா விதிமுறையால் சீனா கோபம்| China warns of countermeasures to new U.S. rules against Chinese journalists | Dinamalar

தவறை சரிசெய்யுங்கள்: அமெரிக்காவின் விசா விதிமுறையால் சீனா கோபம்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (11)
Share
Correct Your Mistake, China, America, US Rule, Chinese Reporters, journalist, counter measures, Beijing, Trump, Donald Trump, தவறை சரிசெய்யுங்கள், அமெரிக்கா, சீனா, ஊடகவியலாளர்கள், நிருபர்கள், விசா, விதிமுறை

பெய்ஜிங்: சீன ஊடகவியலாளர்களுக்கான விசாக்களை 90 நாள் காலத்திற்கு மட்டுப்படுத்தும் புதிய விதியை அமெரிக்கா கொண்டுவந்துள்ளதற்கு, தவறை உடனடியாக சரிசெய்யவில்லை எனில் எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னை தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், சீன ஊடகவியலாளர்களுக்கான விசாக்களை 90 நாள் காலத்திற்கு மட்டுப்படுத்தும் புதிய விதியை அமெரிக்கா கொண்டு வந்தது. இன்று (மே 11) முதல் இந்த விதிமுறை அமலுக்கு வந்தது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்கா, சீன ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறையை அதிகரிக்கிறது. நாங்கள் இதனை உறுதியாக எதிர்க்கிறோம்.


latest tamil news


அமெரிக்கா தனது தவறை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோருகிறோம். இல்லையெனில் எதிர் நடவடிக்கைகளை சீனா எடுப்பதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார். இரு நாட்டு ஊடகவியலாளர்கள் இடையேயான பிரச்னைகள் சில மாதங்களாக தொடர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில், அமெரிக்க செய்தித்தாள் நிறுவனத்தில் இருந்து மூன்று அமெரிக்க பத்திரிகையாளர்களை சீனா வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X