பொது செய்தி

இந்தியா

ரயில்வே இணையதளம் திணறியது

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி; நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று முதல் ரயில்வே டிக்கெட் புக்கிங் இன்று மாலை துவங்கியது. ஆனால் பலரும் ஒரே நேரத்தில் இணையதளத்திற்குள் வந்ததால் இணையதளம் ஒப்பன் ஆவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் மாலை 6 மணிக்கு முன்பதிவு துவங்கியது.



latest tamil news


ஊரடங்கு முடிந்து அரசின் தளர்வுகள் அடிப்படையில் நாளை ( மே.12 ) முதல் முக்கிய நகரங்களுக்கு ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது. குறிப்பாக நாளை முதல், 15 பயணியர் ரயில்கள் மட்டும் இயக்கப்பட உள்ளன. டில்லியில் இருந்து, திப்ருகர், அகர்த்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்புர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மாட்கோன், மும்பை, ஆமதாபாத் மற்றும் ஜம்மு தாவிக்கு இந்த ரயில்கள் இயக்கப்படும். இவை, இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும்.

இதற்கென இன்று (மே.11) மாலை 4 மணிக்கு முன்பதிவு ஆன்லைனில் துவங்கியது. ஆனால் இந்த இணையதளத்தில் டிக்கெட் உறுதியானவர்கள் மட்டும் வரும் 7 நாட்களுக்கு பயணித்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில் ரயில்வே டிக்கெட் வைத்திருப்போர் மட்டும் ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.


latest tamil news



இதனால் பலரும் இன்று மாலை 4 மணி அளவில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பலரும் முயற்சித்தனர். ஆனால் பலருக்கும் இணையதளம் ஒப்பன் ஆகவில்லை. இதனால் பலரும் திணறினர். ரயில்களின் விவரங்கள் பதிவேற்றம் நடப்பதால் இணையதளம் ஒப்பன் ஆவதில் சிக்கல் இருப்பதாக ரயில்வே நிர்வாகம் கூறியது. மேலும் தொடர்ந்து மாலை 6 மணிக்கு முன்பதிவு துவங்கியது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202020:14:45 IST Report Abuse
ஆப்பு ரயில்ல ஏறுவதற்கு முன்னாடி எல்லோரும் ஒருதடவை கை தட்டிட்டு ஏறுங்க. கொரோனா அண்டாது. இப்போதைக்கு நம்ம கிட்டே இருக்குற டெக்னாலஜி இதுதான்.
Rate this:
m.viswanathan - chennai,இந்தியா
11-மே-202021:07:58 IST Report Abuse
m.viswanathanசூப்பர்...
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
11-மே-202020:06:41 IST Report Abuse
S. Narayanan இன்றில்லாவிட்டால் நாளை கிடைக்க போகிறது. எதற்கு அவசரம்.
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
11-மே-202019:18:59 IST Report Abuse
Sathyanarayanan Subramanian கொரோனாவுக்கு வழி வகை செய்துள்ளது ரயில் நிர்வாகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X