தோல்வியை மறைக்க பொய் சொல்லும் அமெரிக்கா: சீனா பதிலடி

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (15) | |
Advertisement
பெய்ஜிங்: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த அமெரிக்க அரசியல்வாதிகளும், மீடியாக்களும் தங்கள் மீது குறை சொல்வதாக சீனா தெரிவித்துள்ளது.உலகளவில் கொரோனா வைரசால் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில், தற்போது வரை 13,67, 963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80,787 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் குறித்து சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப்பும்
corona, coronavirus, covid-19, america, united states, us, china, corona outbreak, corona updates, corona news, corona cases, india, beijing, corona spread, world fights corona, அமெரிக்கா, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, சீனா

பெய்ஜிங்: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த அமெரிக்க அரசியல்வாதிகளும், மீடியாக்களும் தங்கள் மீது குறை சொல்வதாக சீனா தெரிவித்துள்ளது.உலகளவில் கொரோனா வைரசால் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில், தற்போது வரை 13,67, 963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80,787 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் குறித்து சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவும் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். கொரோனா பரவல் குறித்து சீனா உண்மையான தகவல்களை மறைத்துவிட்டதாக கடுமையாக குற்றம்சாட்டினர். மேலும் பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். கொரோனா உருவானது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசியல்வாதிகளும் தோல்வியடைந்துவிட்டனர். இதனை மறைக்க, அவர்களும், அந்நாட்டு மீடியாக்களும் சீனா மீது பொய் குற்றச்சாட்டுகளை சீனா மீது தெரிவிக்கின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்ததால், டிரம்ப் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சீனா மீது குற்றம்சாட்டுகின்றனர். அமெரிக்கா முன்னாள் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் தெரிவித்தபடி, சில மக்களை கொஞ்ச காலம் ஏமாற்றலாம். அனைத்து மக்களையும் கொஞ்ச காலம் ஏமாற்றலாம். ஆனால், எப்போதும் மக்களை ஏமாற்ற முடியாது.latest tamil news

கொரோனா வைரஸ், வூஹானில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது அங்கு தோன்றவில்லை. உண்மையில், எங்கு தோன்றியது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் கொரோனா உருவாக்கப்படவில்லை. கொரோனா குறித்து உலகத்திற்கு சரியான நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. வைரஸ் குறித்த விவகாரத்தில், நாங்கள் வெளிப்படையாகவும், பொறுப்பாகவும் நடந்து கொண்டோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (15)

jay - toronto,கனடா
12-மே-202005:58:14 IST Report Abuse
jay நோயை பரப்பி ,, உலகமே தத்தளிக்குது ,, இனி வேலை இல்லா திணடாடம் ,, இப்ப அமெரிக்காவை சாப்டுறகு
Rate this:
Cancel
jay - toronto,கனடா
11-மே-202022:14:24 IST Report Abuse
jay Suranai illa . Inthiya Ellaiyil uduruviya ivanullu ipaadi elutha ...
Rate this:
Cancel
11-மே-202019:57:21 IST Report Abuse
நக்கல் இந்த கம்யூனிஸ்ட் நாடான சீன ராட்ச்சனை வளர்த்து விட்ட பெருமை அமெரிக்காவையே சாரும்... இந்த முறை இவர்களை அடக்கிய பிறகு இனியாவது அமெரிக்கா இது போன்ற ராட்சசர்களை வளரவிடக்கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X