வித்தியாசமான ஊரடங்கு உத்திகளைக் கையாளும் உலக நாடுகள் | Coronavirus: More and more countries introduce curfews | Dinamalar

வித்தியாசமான ஊரடங்கு உத்திகளைக் கையாளும் உலக நாடுகள்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (3)
Share
 வித்தியாச, ஊரடங்கு உத்தி, உலக நாடுகள், curfew, lockdown, countries, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, new corona cases, corona spread, world fights corona

கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் அதிகரித்து வருகிறது. கிழக்காசிய நாடான தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்துப் பேசுகையில் தென் கொரியா கொரோனாவின் இரண்டாவது கட்டத்தில் உள்ளது என்றார். ஆகவே மக்கள் மிக கவனமாக இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ளது ஷுலான் நகர். இதில் கொரோனா தாக்கம் இன்னும் ஓயவில்லை. ஆகவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அரசால் அறிவுறுத்தப் பட்டு உள்ளது.

ரஷ்யா, வடகொரியா ஆகிய இரு எல்லைகளும் சந்திக்கும் இடம் ஜிலின். இங்கிருந்து இந்த இரு நாடுகளுக்குமே கொரோனா பரவும் அபாயம் உள்ளது எனக் கூறப்படுகிறது. 76 நாள் ஊரடங்குக்குப் பின்னர் வூஹான் நகரில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டது.


latest tamil news




ஜெர்மனி, ஹங்கேரி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கம் சராசரியாக உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் குறைந்தபட்சம் ஒருவருக்காவது கொரோனா பரவும் என்ற நிலை உள்ளது. மேற்கண்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏறி ஏறி இறங்குகிறது. இதுகுறித்து முன்னதாகப் பேசிய ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் நிலமை கட்டுக்குள் இருந்து கைமீறவில்லை என்றார்.

'ஸ்னாப் பேக் மெக்கானிஸம்' என்ற நிலை ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.அதாவது குறிப்பிட்ட பகுதியில் வாழும் 100 குடிமக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமெனில் அதற்கும் மேல் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அப்பகுதியில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் பலப்படுத்தப்படும்.
இதுபோல வட்ட, மாவட்ட வாரியாக ஊரடங்கு, மாநில அரசுகளின் கட்டுக்குள் இருந்தால், கொரோனாவை விரைவில் விரட்டலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுபோல பல உத்திகள் கொரோனாவை கையாள உலக நாடுகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X