ரயில் கட்டணத்தை சோனியா ஏற்றுள்ளார்: சர்ச்சையான எம்எல்ஏ நோட்டீஸ்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
Sonia Gandhi, Congress, Politics, Paid, ticket fare, train ticket, special train, Your Tickets, Congress, MLA, Migrant workers, Congress MLA, Punjab MLA, Railways, Indian railway, lockdown, travel ban, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona case, Train, சோனியா, ரயில், டிக்கெட், கட்டணம், காங்கிரஸ், எம்எல்ஏ, நோட்டீஸ்

புதுடில்லி: வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் டிக்கெட் கட்டணத்தை காங்., தலைவர் சோனியா ஏற்றுள்ளதாக அக்கட்சி எம்எல்ஏ நோட்டீஸ் விநியோகித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை சிறப்பு ரயில் மூலம் அழைத்து செல்ல ரயில்வே நிர்வாகம் கட்டணத்துடன் முன்பதிவு கட்டணமாக ரூ.50 கூடுதலாக வசூலிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து, மத்திய அரசு மற்றும் ரயில்வேத்துறையை விமர்சித்த காங்., இடைக்கால தலைவர் சோனியா, புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை காங்., கட்சி ஏற்கும் என அறிவித்திருந்தார். அடுத்த சில மணிநேரத்தில், வெளி மாநில தொழிலாளர்களின் டிக்கெட்டுகளுக்கான செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும் என்றும், மீத தொகையை மாநில அரசுகள் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.


latest tamil news


இந்நிலையில் பஞ்சாபில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள், அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அங்கிருந்து பீகார் மாநிலம் முசாபர்பூருக்கான சிறப்பு ரயில், பதிந்தா ரயில் நிலையத்தில் புறப்பட்டது. ரயில் புறப்படுவதற்கு முன்னதாக, நோட்டீஸ்களுடன் காங்., எம்எல்ஏ அமரிந்தர் ராஜா வாரிங் நோட்டீஸ்களுடன் வந்து, தொழிலாளர்களிடம் விநியோகம் செய்தார். அதில், 'துயரமான நேரத்தில் உங்களுடன் இருக்கும் காங்கிரஸ்' என்ற தலைப்பில் விநியோகித்த அமரிந்தர், ‛‛உங்கள் டிக்கெட்டுக்கான முழு தொகையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செலுத்தி விட்டார். காங்கிரஸ் கட்சியும், முதல்வர் அமரிந்தர் சிங், காங்கிரஸ் மாநில தலைவர் சுனில் ஜகார் ஆகியோர்தான் உங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கின்றனர்,'' எனக் கூறினார்.

வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் டிக்கெட் கட்டணத்தை மத்திய அரசும், மாநில அரசும் செலுத்தும் என அறிவிக்கப்பட்டும், சோனியா ஏற்றுள்ளதாக கூறி, எம்எல்ஏ நோட்டீஸ் விநியோகித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202022:02:30 IST Report Abuse
பேசும் தமிழன் டிக்கெட் கட்டணத்தை மத்திய அந்தந்த மாநில அரசுகள் ஏற்றுக்கொண்ட போது ....இத்தாலி அம்மையார் வழங்கினார் என்று பொய் சொல்ல எப்படி முடிகிறது ....அந்த அம்மையார் என்ன இத்தாலியில் இருந்து கொண்டு வந்து கொடுத்தாரா ??? இந்த பொழப்பு போழைகதுக்கு .... நாண்டுகிட்டு சாகலாம்
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
11-மே-202021:58:27 IST Report Abuse
sankaranarayanan இவ்வளவு கேடுகெட்ட பொழைப்பு கான் கிராஸுக்கு தேவையே இல்லை. சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி இப்படி தில்லுமுள்ளு செய்ய வேண்டுமா? பிட் நோடீசு கொடும்படி தரம் தாழ்ந்து போய் விட்டதே அந்தக்கோ இனி அந்த கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? கிராமத்து கட்ச்சியாகிவிட்டதே. இவர்களை ரயில் பெட்டிகளின் அருகில் விட்டது யார்? மட்டமான அரசியல்.
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
11-மே-202020:59:54 IST Report Abuse
Ramona Soniaஅவங்க சொந்த பணத்தை எடுத்து கொடுக்கிறாங்க போல தெரியுது, பிட் நோட்டீஸ அந்த கட்சி காரங்க தயவு , இது போல அவங்க கூட்டணி கட்சியினரையும் செலவு செய்ய சொல்ல வேண்டும், அப்படி சொன்னா கூட்டணி நிலைக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X