பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு; மொத்தம் 8,002 பேர் பாதிப்பு

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 11) ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆகவும், பலி எண்ணிக்கை 53 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில், 514 ஆண்கள், 284 பெண்கள் அடங்கும். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை சேர்ந்த 4 பேர், கடலூரை சேர்ந்த ஒருவர் மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் என கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



இன்று மட்டும் 92 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,051 ஆக உள்ளது. தற்போது 5,895 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒரே நாளில் 11,862 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
svs - yaadum oore,இந்தியா
12-மே-202006:34:34 IST Report Abuse
svs இதெல்லாம் கை மீறி போன விஷயம் ..கோயம்பேடு விட திருமழிசை மார்க்கெட் கூட்ட நெரிசல் ......எல்லாமே லஞ்சம் , கட்டிங்..... இவனுங்களுக்காக ஊரடங்கை நீடிப்பது அனாவசியம் .....திருச்சி , மதுரை எங்கும் ஒரே கூட்ட நெரிசல் .....வயதானவர்கள் , குழைந்தைகள் மட்டும் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யட்டும் ....மீதி பேருக்கு மருந்துகள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பட்டும் .....ஊரடங்கை தளர்த்தி வேலைக்கு செல்ல வழி செய்யட்டும் ......
Rate this:
Cancel
Krish - Bengalooru,இந்தியா
12-மே-202005:06:14 IST Report Abuse
Krish தமிழ் நாட்டில் கரோனாவுக்கான மருத்துவ பரிசோதனை மற்ற மாநிலங்களைவிட உண்மையாகவும் அதிகம் பேருக்கும் நடக்கிறது .இதுவே தமிழக எண்ணிக்கை கூடியத்திற்கு காரணம்.
Rate this:
Cancel
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
11-மே-202022:32:25 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் நாட்டில் எல்லா நிதி வருவாய் அனைத்தும் மத்திய அரசிடம் , இவர்கள் நிர்வகிக்கும் வேலைதானே தவிர செலவு செய்ய அல்ல , விமானத்தில் பூ போட 680 கோடி , மோடி ADVERTISEMET 2000 கோடி , இவர் ஊர் சுற்ற 5000 கோடி அப்படி இல்லமால் தர்ம பிரபு தள்ளுபடி செய்ய 68000 கோடி இப்படி வாரி வழங்கிவிட்டு மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கவேண்டிய நிலுவை தொகை பற்றி பேச்சே காணோம் அப்போ அரசு அந்த அளவுக்கு திவால் ஆகி விட்டதா என்ன என்று தான் மம்தா திதி கேக்கிறார், இப்படி நம்ம பழனி எப்போ கேட்பார் இதற்க்கு மோடிதான் சம்மதம் தரணுமா என்ன
Rate this:
sankar - Nellai,இந்தியா
12-மே-202008:25:46 IST Report Abuse
sankarநீ சொன்ன செலவுக்கு எல்லாம் உன்னிடம் கணக்கு இருக்கிறதா மிஸ்டர் - அனாவசியமாக பேசி வம்பில் மாட்டாதே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X