முலாயம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

லக்னோ:உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் சமஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



latest tamil news



சமஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம்சிங் யாதவ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில் நேற்று (10ம் தேதி) அவருக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. தற்போது வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் கபூர் கூறுகையில் அவரது குடலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.தற்போது அவரது உடல் நிலை சீராக இருந்து வருகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். என கூறினார்.


latest tamil news



முன்னதாக கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முலாயம் சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மீண்டும் நேற்று (10 ம் தேதி ) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 நாட்களில் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
12-மே-202006:07:16 IST Report Abuse
 Muruga Vel கலப்பட மருந்து எதுவும் சாப்பிடவில்லையே ..
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
11-மே-202021:17:44 IST Report Abuse
Tamilnesan இவர் நம்மூர் கட்டுமரத்தை போன்றவர்..........குடும்பமே கூட்டுக்கொள்ளை அடித்த பாரம்பர்யம் வாய்ந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X