சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ரயிலுக்காக காத்திருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020
Share
Advertisement

சென்னை : கொரோனா அச்சுறுத்தலால் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வதற்காக சென்னை சென்ட்ரலில் காத்துக்கொண்டிருப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அச்சுறுத்தல்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கால் தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்படுவதற்கான அனைத்து நடவடிக்கையையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாநிலங்களிலும், அனுமதி பெற்று அம்மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு ரயில்கள் மூலம் அனுப்புகிறது. இந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் ரயில்களுக்காக பதிவுசெய்து, டிக்கெட் கிடைத்த வுடன்தான் வரவேண்டுமெனக் அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் ஊர் செல்லும் பரிதவிப்போடு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தொழிலாளர்கள் வருவது தொடர்ந்தபடியே இருக்கிறது.


latest tamil news



பீஹார், ஒடிசா மாநிலங்களை சேர்ந்த பல்வேறு மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியுமா, அதற்கு ரயில் கிடைக்குமா, வாழ்வாதாரம் பாதிப்பில் இருந்து விடுபடலாமா என பல்வேறு நம்பிக்கையுடன் தினமும் காலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி வருவதும், பிறகு போலீசாரால் அங்கிருந்து அகற்றப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் பீஹாரின் பாட்னாவை சேர்ந்த தீபக் என்ற தொழிலாளி, தங்கியிருக்கும் இடத்தில் இருந்து 22 கி.மீ தூரம் நடந்து சென்று சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு வந்து விட்டார். தற்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டிலிருந்து மனைவியும் குழந்தையும் கூப்பிட்டுக் கொண்டியிருக்கிறார்கள். எப்படியாவது ஊர் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென நினைக்கிறேன். என்னுடைய வண்டி எப்போது வரும்?" என்று கேட்கிறார் தீபக். இதுபோல் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.


latest tamil news



தொடர்ந்து, இவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும், காப்பிடத்திலும், ரயில் வசதி குறித்த சரியான தகவல்கள் சென்று சேர்வதில்லை என்பதுதான். சென்னை மாநகராட்சியின் தங்குமிடத்திற்குச் செல்லவேண்டியதுதானே என்றால், அதைப் பற்றிய குழப்பமே அவர்களிடம் இருக்கிறது. வெளிமாநில தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால்,ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் குறுஞ்செய்தி வரும். அதையே டிக்கெட் என நினைத்து பயணத்திற்கு திட்டமிட்டு கிளம்பி விடுவதுதான் தவறானது. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பலமுறை அறிவுறுத்தியும், முறையான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் கூறி வருகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X