கொரானா காலத்தில் போராடும் மாற்றுத்திறனாளி லோகநாதன்.| Dinamalar

கொரானா காலத்தில் போராடும் மாற்றுத்திறனாளி லோகநாதன்.

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (1)
Share
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?கொரானா காலத்தில் போராடும் மாற்றுத்திறனாளி லோகநாதன்.கொரானா தரும் சோதனைகளால் சோர்ந்து போய்விடாது அடுத்தடுத்த பல வேலைகளைச் செய்துவரும் மாற்றுத்திறனாளி லோகநாதன் தற்போது மோர் விற்று வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.கொரோனா பலரது வாழ்க்கை புரட்டி போட்டுவிட்டது அதில் சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த
latest tamil news


தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
கொரானா காலத்தில் போராடும் மாற்றுத்திறனாளி லோகநாதன்.


latest tamil news


கொரானா தரும் சோதனைகளால் சோர்ந்து போய்விடாது அடுத்தடுத்த பல வேலைகளைச் செய்துவரும் மாற்றுத்திறனாளி லோகநாதன் தற்போது மோர் விற்று வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
கொரோனா பலரது வாழ்க்கை புரட்டி போட்டுவிட்டது அதில் சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த லோகநாதனும் ஒருவர்.
நல்ல சம்பளத்தில் ஒரு இடத்தில் வேலைக்கு இருந்தார் திடீரென அங்கு இருந்து நிறுத்தப்பட்டுவிட்டார்.
வேலை பார்த்த இடத்தில் கிடைத்த அனுபவத்தை வைத்து பாங்கில் லோன் போட்டு சொந்தமாக கடைவைத்தார்.கடை வைத்த இடமும் நேரமும் சரியில்லாமல் போனாதால் போட்ட முதலீடுகளை இழந்து கடையை பூட்டும் நிலைக்கு சென்றார்.
வேலையும் இல்லாமல் சொந்த கடை வருமானமும் இல்லாமல் இருந்த லோகநாதன் குடும்பத்தை அவரது மனைவி செல்வி தாங்கிப்பிடித்தார் அவர் வேலைக்கு போய் கிடைத்த சம்பளத்தில் குடும்பம் ஒடிக்கொண்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக வேலை பார்த்த இடத்தில் இருந்து சம்பளமும் வரவில்லை.
எவ்வித வருமானமும் இல்லாததால் சோர்ந்து போன தம்பதியர் இருவரும் வீட்டிலேயே டீ தயாரித்து விற்பது என முடிவு செய்து டீ தயாரித்து பூங்கா பகுதியில் விற்று வந்தனர்.கொரோனா கால சட்டப்படி அதுவும் போலீசாரால் தடை செய்யப்பட்டது.
சரி வெயில் காலமாக இருக்கிறதே அதற்கு ஏற்ப ஏதாவது செய்யலாம் என யோசித்து தற்போது வீட்டிலேயே தரமான மோர் தயாரித்து ரோடு ரோடாக போய் வியாபாரம் செய்து வருகிறார்.
தடை நீக்கப்பட்ட நிலையில் தற்போது காலையில் டீயும் பகலில் மோரும் விற்று வருகிறார்.
கொரோனா சட்டப்படி பார்சல் மட்டுமே கொடுக்கிறார் கவுரமாக சாப்பிடும் அளவிற்கு வருமானம் வருகிறது.
ஆனால் வீட்டு வாடகை கொடுக்குமளவு வருமானம் வரவில்லை வருமானத்தை கூட்டுவதற்காக மோர் விற்காத மாலை நேரம் செல்போன் சர்வீஸ் செய்ய முடிவு செய்து தற்போது அதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறார்.
ஒவ்வொரு சோதனை வரும்போதும் அதை கடந்து செல்வதற்கும் வழி ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பிழைப்பதற்காக உழைத்தால் அந்த உழைப்பு ஒரு நாள் உயர்த்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லும் லோகநாதன் அடுத்த வாடிக்கையாளர்கள் இருப்பிடத்தை நோக்கி தனது இருசக்கர வாகனத்தை ஒட்ட ஆரம்பிக்கிறார் கூடவே வாழ்க்கையையும்...
-எல்.முருகராஜ்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X