பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு இல்லை: நிதி அமைச்சகம்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், கொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட வாய்ப்பு
Ministry of Finance, salary, central government, employees, delhi, coronavirus, corona, covid-19, corona outbreak, corona  updates, corona news, corona cases,  நிதி அமைச்சகம், அரசு ஊழியர்கள், சம்பள குறைப்பு

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், கொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவியது. இதனை மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது.


latest tamil newsஇதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய சம்பளத்தில், குறைக்கும் எந்த எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை. இதுகுறித்து சில ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் அனைத்தும் தவறானவை. சம்பள குறைப்புக்கு அரசுக்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
12-மே-202005:06:27 IST Report Abuse
மதுரை விருமாண்டி நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ .. நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ . வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ.. வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ .. தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ . தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ . கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ .. களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ . குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ .. ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ - வள்ளலார். இந்த மோசடி கூட்டம் இதிலே எதை செய்யலைன்னு சொல்லுங்க ..
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
11-மே-202021:22:07 IST Report Abuse
sundarsvpr மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும். கேரளாவில் ஒரு மாத சம்பளம் தொகை 5 தவணைகளில். அதாவது மாதம் 6 நாள் சம்பளம். கொரோனா பாதிப்பு எதனை ஆண்டுகள் நீடிக்கும் என்பதை ஆண்டவனால் கூட கணிக்கமுடியாது. தேவை. விவசாயம் நீர் பாதுகாப்பு காற்று மாசுபடாமை சுத்தம் நோய் எதிர்ப்பு சக்தி. இவைகள் தான் முன்னுரிமை. மற்றவை சிறுக சிறுக கவனிக்கலாம். விளைச்சல் இல்லாமல் சம்பளம் முழுமையாய் வழங்கி என்ன செய்வது?
Rate this:
Cancel
thiru - Chennai,இந்தியா
11-மே-202021:04:23 IST Report Abuse
thiru சம்பளம் குறைக்கப்படமாட்டாது அனால் சம்பளமே கிடையாது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X