பொது செய்தி

இந்தியா

ராம் ஜென்மபூமி பகுதியில் மொபைல் போன்களுக்கு தடை

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

அயோத்தி: உ.பி.,மாநிலம் அயோத்தியில் உள்ள ராம் ஜென்ம பூமி பகுதயில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இது குறித்துகூறப்படுவதாவது: பாதுகாப்பு கவலைகளை கருத்தில் கொண்டு மொபைல் போன்களுக்கு தடை செய்யப்படுவதாக ஸ்ரீராம் தீர்த்த கேஷத்ரா அறக்கட்டளை செயலாளர் சம்பத்ராய் தெரிவித்துள்ளார். இதன்படி மாவட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கு மட்டுமே மொபைல்போன்கள் அனுமதிக்கப்படும்.


latest tamil news



முன்னதாக ராம் லல்லா சிலை தற்காலிக கோயிலில் இருந்து புதிய கட்டமைப்பிற்கு மாற்றப்பட்ட போது தொழிலாளர்கள் உட்பட பரும் தங்களின் மொபைல் போனை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கோயிலையும் அதனை சுற்றி உள்ள பகுதியையும் பக்தர்கள் போட்டோ எடுத்து வருகின்றனர். இது பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்து இதனை கருத்தில் கொண்டு ஸ்ரீ ராம் தீர்த்த கேஷத்ரா அறக்கட்டளை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து மாவட்ட நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது என அவர் கூறினார்.

இதற்கிடையே ராம்லல்லாகோயிலின் தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திரதாஸ் மொபைல் போன்களை தடை செய்யும் முடிவை வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ராம் கோயில் பகுதி உயர் பாதுகாப்பு மண்டலமாகும். மேலும் அதன் பாதுகாப்பை வலுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் வரவேற்கத்தக்கது. நான் கூட எனது மொபைல் போனை கோயில் பகுதிக்கு கொண்டு செல்வதில்லை, ”என்றார்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
12-மே-202001:33:42 IST Report Abuse
Abbavi Tamilan ஊரடங்கு நேரத்தில் அங்கு ஏதோ நடந்து கொண்டு இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X