கனடாவில் ஊரடங்கு தளர்வு குறித்து பிரதமர் ட்ரூடோ எச்சரிக்கை

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020
Share
Advertisement

ஒட்டாவா : கனடாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் பொருளாதாரத்திற்காக ஊரடங்கினை முழுமையாக தளர்த்தினால் பாதிப்பு அதிகரிக்ககூடும் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாட்களுக்கு முன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பொருளாதாரம் நலிவடைந்துள்ள காரணத்தால் நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யகூடாது எனவும், நீங்கள் சிறு அளவிலான தொழில் நடத்தி வந்தால் உங்களுக்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக ஊதிய மானியத்தை அரசு வழங்கும்.

இதன் மூலமாக உங்கள் ஊழியர்களுக்கு நீங்கள் தகுந்த ஊதியத்தை வழங்க முடியும். இதனால் யாரும் வேலையை இழந்து விடக்கூடாது என்பதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கொரோனாவால் தொழிலில் பாதிப்பு அடைந்தால் உதவி செய்ய, கனடா ஏற்றுமதி நிதியகத்தை தொடர்பு கொள்ளலாம். அதன்மூலம் தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என கூறியிருந்தார்.


latest tamil news



தொடர்ந்து பல நாடுகளிலும், கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகளை சற்று தளர்த்தப்பட்டு வருகிறது. பொருளாதார பாதிப்பு காரணமாக மக்களும் தங்கள் பணிகளை செய்ய துவங்குகின்றனர். இதுபோல் கனடாவிலும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து பல கருத்துக்கள் நிலவின. கனடாவில் பொருளாதாரத்தை விரிவாக்க நாட்டை ஊரடங்கிலிருந்து மீண்டும் திறந்தால், கொரோனா அதிகரித்து கோடை காலம் முழுவதுமாக மீண்டும் மூட வேண்டிய சூழல் ஏற்படலாம் என அந்நாட்டின் பிரதமர் எச்சரித்தார்.


latest tamil news



இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர், ட்ரூடோ கூறியதாவது : கனடாவில் கொரோனா பாதிப்புகளுக்கு தேவையான நடவடிக்கைகளை நமது அரசு செயலாற்றி வருகிறது. பல மாகாணங்களிலும் பாதிப்புகள் குறைந்து வருவதாக கூறப்பட்டாலும் இன்னும் கனடா முழுமையாக பாதிப்புகளில் இருந்து மீண்டுவரவில்லை. கியூபெக் பார்லி.,மாவட்டமான மாண்ட்ரீல் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கவலையடையச் செய்கிறது. கொரோனா பாதிப்புகள் குறைந்து மீண்டும் படிப்படியாக தான் ஊரடங்கு விதிகளை தளர்த்த வேண்டும். அவ்வாறு செய்தால் தான் கனடாவின் பொருளாதாரமும் செழிக்கும். மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.

"நாங்கள் இன்னும் அவசரகால கட்டத்தில் இருக்கிறோம். பெரும்பான்மையான கனேடியர்கள் தொடர்ந்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்." நாட்டில் கொரோனா பாதிப்பு 69000 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,871 உள்ளது. இவற்றில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சையில் உள்ளனர். மேலும் நாட்டின் பாதிப்புகளில் 80சதவீதம் பேர் கியூபெக்கில் பாதிக்கப்படுகின்றனர்.

தொடர்ந்து 80 சதவீத மக்கள் நர்சிங் ஹோம்களில் பாதிக்கப்படுபவர்களாக உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று. கியூபெக் தனது பொருளாதாரத்தை படிப்படியாக மறுதொடக்கம் செய்வதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. கனடாவும் நோயின் தன்மையை "மிகவும் கவனமாகப் பார்க்கும்". மேலும் நாட்டில் மிகைப்படுத்தப்பட்ட வழியில் யாரும் லாபம் ஈட்டவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு ட்ரூடோ கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X