கொரோனா ; அமெரிக்காவில் பலியானவர்களில் 3 ல் 1 பங்கு முதியவர்கள்

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020
Share
Advertisement

வாஷிங்டன் : அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களில் மூன்றில் ஒரு பங்கு முதியவர்கள் என தெரிய வந்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. பல ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து, அமெரிக்காவிலும் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அங்கு அனைத்து மாகாணங்களிலும் நோய் பரவலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளதே காரணமாகும். கொரோனா காரணமாக அமெரிக்காவில் இதுவரை 13,67,638 பேர் பாதிக்கப்பட்டனர். பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 80, 787 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



அமெரிக்காவில் பலியான நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு முதியவர்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை அந்நாட்டு பத்திரிக்கை ஊடகங்களும் (நியூயார்க் டைம்ஸ்) தெரிவித்துள்ளது. இங்குள்ள முதியோர் இல்லங்களில் 25,600 முதியவர்களும், பணியாளர்களும் பாதிக்கப்பட்டு பலியானதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள 7500 முதியோர் இல்லங்களில் சுமார் 1,43,000 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X