கிராமங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது சவால்!

Updated : மே 13, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கிராமங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது சவால்!

புதுடில்லி : ''கொரோனா வைரஸ் பிரச்னையை எதிர்கொள்வதற்கு, சமச்சீரான செயல் திட்டத்தை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வைரஸ், நம் நாட்டின் கிராமப் பகுதிகளுக்கு பரவி விடாமல் இருப்பதை உறுதி செய்வதே, நம் முன் உள்ள மிகப் பெரிய சவால்,'' என, அனைத்து மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் போது, பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மார்ச், 24ம் தேதியிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு, வரும், 17ல் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம்என்பது குறித்து, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன், பிரதமர் மோடி, நேற்று மாலை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், மாநில அரசுகள் முக்கிய பங்காற்றியுள்ளன. இந்தப் பிரச்னையில், மாநில அரசுகள், தங்கள் பொறுப்பை உணர்ந்து, செயல்பட்டுள்ளன. மத்திய அமைச்சரவை செயலர், அனைத்து மாநில தலைமைச் செயலர்களுடன் தொடர்பு கொண்டு, நிலைமையை கண்காணித்து வந்தார்.
வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், நாம் இன்னும் அதிகமாக செயல்பட வேண்டியுள்ளது. இதற்காக அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, புதிய வழிகாட்டும் விதிமுறைகள் வகுக்கப்படும்.


செயல் திட்டம்வைரசிலிருந்து காத்துக் கொள்ள, நம் நாட்டு மக்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். வைரஸ் பரவாமல் இருக்க, அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என, ஊரடங்கு காலத்தில் வலியுறுத்தினோம். ஆனாலும், தங்கள் சொந்த மாநிலத்திலிருந்து, வேறு மாநிலங்களுக்கு பணி நிமித்தமாக சென்ற தொழிலாளர்கள், தங்கள் வீடுகளுக்கு திரும்ப விரும்பினர். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, விதிமுறைகளில் சிறிய மாற்றங்களை செய்தோம்.

சமூக விலகல் நடைமுறையை சரியாக பின்பற்றாத இடங்களில் எல்லாம், வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.கொரோனா வைரஸ் பிரச்னையை எதிர்கொள்வதற்கு, சமச்சீரான செயல் திட்டத்தை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
ஊரடங்கை தளர்த்துவதன் மூலம், தற்போது நகர்ப்புறங்களில் அதிக அளவில் உள்ள வைரஸ், கிராமப் புறங்களுக்கு பரவி விடாமல் இருப்பதை உறுதி செய்வதே, நம் முன் உள்ள மிகப் பெரிய சவால். எந்த காரணத்தாலும், கிராமப்புறங்களில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது. சமீபகாலமாக, வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளன.


அடுத்த கட்டம்பொருளாதார நடவடிக்கைகள் சிறிது சிறிதாக, அதே நேரத்தில் சீரான வேகத்தில் மீண்டும் துவங்கியுள்ளன. வரும் நாட்களில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கலாம். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை, நாம் சிறப்பாக கையாண்டதை பார்த்து, உலக நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. இனி, நாம் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும்.அனைத்து மாநில முதல்வர்களும் தெரிவித்த ஆலோசனைகளின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பிரச்னைக்குப் பின், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன்ஆலோசிப்பது, இதுஐந்தாவது முறை. ஏற்கனவே நடந்த ஆலோசனை கூட்டங்களின் போது, குறிப்பிட்ட சில மாநிலங்களின் முதல்வர்களுக்கு மட்டுமே பேச வாய்ப்பு அளிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால், நேற்று நடந்த கூட்டத்தில், பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்களுக்கு, தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.


மம்தா பாய்ச்சல்பிரதமர் மோடியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மத்திய அரசின் மீது கடும் அதிருப்தி தெரிவித்ததாகதகவல் வெளியாகி உள்ளது. கூட்டத்தில் மம்தா பேசியதாவது:கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது, மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது. வைரஸ் ஒழிப்பு குறித்து, எங்கள் கருத்துக்களை யாரும் கேட்கவில்லை. அரசியல் விளையாட்டு விளையாடுவதற்கு இது நேரமல்ல. கூட்டாட்சி அமைப்பு முறையை தயவு செய்து சீர்குலைத்து விடாதீர்கள். உங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கும்போது, எங்களை ஏன் குறி வைத்து தாக்குகிறீர்கள். எதற்கு எடுத்தாலும், மேற்கு வங்க மாநிலத்தின் மீது, ஏன் பழி சுமத்துகிறீர்கள்?எதற்காக எங்களை விமர்சிக்கிறீர்கள்? இவ்வாறு, மம்தா பேசியதாக, மேற்கு வங்க அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


முதல்வர்கள் பேசியது என்ன?விவசாய சந்தைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். கடன்களை திருப்பிச் செலுத்துவதில் மேலும் சில தளர்வுகள் தேவை. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப, இது பெரிய அளவில்வழி வகுக்கும்.ஜெகன்மோகன் ரெட்டிஆந்திர முதல்வர், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்


பயணியர் ரயில்களை இயக்கும் முயற்சியை, இன்னும் சில காலத்துக்கு தள்ளி வைக்க வேண்டும். ரயில்களை மீண்டும் இயக்கினால், வைரஸ் அதிக அளவில் பரவுவதை தடுக்க முடியாது. இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். சந்திரசேகர ராவ்தெலுங்கானா முதல்வர், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி


கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, மாநிலத்துக்குள் மேற்கொள்வதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதி எது, குறைவாக உள்ள பகுதி என்பதை அறிவிக்கும் பொறுப்பை, அந்தந்த மாநில அரசுகளிடம் தர வேண்டும். பூபேஷ் பாஹெல்சத்தீஸ்கர் முதல்வர், காங்.,


நிதி மற்றும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில், முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும். அப்போது தான், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். சிறிய தளர்வுகளுடன், ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம்.
அமரீந்தர் சிங்பஞ்சாப் முதல்வர், காங்.,


ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும். அசாமுக்கு ரயில் சேவையை துவங்கினால், போதிய கால இடைவெளி விட்டு ரயில்களை இயக்க வேண்டும். அடிக்கடி ரயில்களை இயக்குவது, வைரஸ் பரவலை அதிகரித்து விடும். சர்பானந்த சோனவால்அசாம் முதல்வர், பா.ஜ.,

கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரயில், சாலை, விமான போக்குவரத்தை மீண்டும் துவக்க வேண்டும். மாநில போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்களை, சமூக விலகல் நடைமுறையுடன் இயக்க அனுமதி அளிக்க வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்க, நிதி உதவி அளிக்க வேண்டும். பினராயி விஜயன்கேரள முதல்வர், மார்க்சிஸ்ட்

கொரோனா வைரஸ் பரவல், அடுத்த இரு மாதங்களில் அதிக அளவில் இருக்கும் என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, ஊரடங்கை தளர்த்தும் விஷயத்தில், மிகுந்த கவனமாகவும், முன் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். உத்தவ் தாக்கரேமஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
12-மே-202011:42:06 IST Report Abuse
Nallavan Nallavan 68000 கோடி தள்ளுபடி செய்த அரசு தமிழகத்திற்கு GST மூலம் தரவேண்டிய தொகையை கொடுத்தால் இன்னும் சிறப்பாக தமிழக அரசு செயல்படும், ஊரடங்கால் வேலை இழப்பு: டெல்லியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 வழங்குகிறது கேஜ்ரிவால் அரசு, இந்த அறிவிப்பு கட்டிடத் தொழிலாளர்களுக்கு ஒரு ஆறுதலான விஷயம் ஆகும். இதன்மூலம், டெல்லியில் இருந்து தொடர்ந்து வெளியேறும் வெளிமாநிலத் தொழிலாளர்களை தடுக்கும் முயற்சியாகவும் இந்த அறிவிப்பு உள்ளது. இதுபோல், தொழிலாளர்களுக்கு டெல்லி அரசு தற்போதைய ஊரடங்கு சமயத்தில் இழப்பீடாக ரொக்கத் தொகை வழங்குவது புதிதல்ல. டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் ரூ.5000 வங்கிகள் மூலமாக அளித்திருந்தது நினைவு கூரத்தக்கது. இந்த மாதிரி ஏழை தொழிலார்கள் மீது ஏன் தமிழக அரசு அக்கறை கொள்ளவில்லை... அப்புறம் கிராமங்கள் எங்கே
Rate this:
Cancel
12-மே-202006:22:30 IST Report Abuse
ஆப்பு பெருநகரங்களில் வெற்றிகரமாக கொரோனா பரவலை தடுத்து விட்டோம். இனிமே கிராமங்கள் தான் பாக்கி. அதுக்குத்தான் ஸ்பெசல் ரயில் வுட்டு தொழிலாளர்களை அரசு செலவில் அனுப்பிச்சிருக்கோம். எல்லோரும் கைதட்டலாம்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
12-மே-202004:16:06 IST Report Abuse
blocked user குளிர் வசதி அதிகம் கிடையாது. ஆகையால் கிராமங்களில் கொரோனா பரவுவது மட்டுப்படுத்தப்படும். கூட்ட நெரிசல் உள்ள இடங்களை தவிர்த்தால் கட்டுப்படுத்துவது இன்னும் எளிது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X