வரியை 3 மடங்கு உயர்த்தியது சவுதி அரேபியா!

Updated : மே 11, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
Saudi Arabia, triples taxes, tax, Saudi, சவுதி, சவுதிஅரேபியா,

துபாய்: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, கொரோனா பாதிப்புகளை சமாளிக்க, சவுதி அரேபிய அரசு, வரியை 3 மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும் அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களை குறைத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது.

சவுதி அரேபியாவுக்கு முக்கிய பொருளாதார வளமான கச்சா எண்ணெய், வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் முக்கிய வருவாய் தரும் மெக்கா, மெதினா புனிததலங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் செல்வம் கொழிக்கும் சவுதி, சிக்கன நடவடிக்கையில் இறங்கிவிட்டது.


latest tamil news


அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களை(ரூ.19.68 லட்சம் கோடி) குறைத்துக்கொள்ள சவுதி அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அடிப்படை பொருட்களுக்கான வரியையும் 15 சதவீதமாக (3 மடங்கு) உயர்த்தி உள்ளது.


latest tamil news



இதுகுறித்து, சவுதி நிதியமைச்சர் முகமது அல் ஜத்தான் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், 2020ம் ஆண்டின் முதல் காலாண்டின் அரசின் வருவாய் 22% குறைந்துவிட்டது. அதாவது 900 கோடி டாலர் பற்றாக்குறை நிலவுகிறது. கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயும் 24% குறைந்துவிட்டது. எனவே அரசின் செலவில் இருந்து, 2,600 கோடி டாலர்களை(10,000 சவுதி ரியால்) குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.

மேலும் சவுதி மக்கள் பெற்று வந்த வாழ்வாதார தொகையையும் ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 1350 கோடி டாலர் மிச்சமாகும். பொருட்களுக்கான அடிப்படை வரி, ஜூலை மாதத்திலிருந்து 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ஏழைகளுக்கு கிடைக்கும் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-மே-202021:34:13 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் ஆனா மன்னரும் ஐநூறு கிழ மற்றும் இளவரசர்களும் ஆளுக்கு நூறு சொகுசு கார், கப்பல், வெளிநாட்டு காதலி, கூத்தியா ன்னு குறைவில்லாம கொண்டாடிக்கிட்டு இருப்பாங்க. அதிலே எதுவும் குறைஞ்சிட கூடாதுன்னு கவலை.
Rate this:
Cancel
Swaminathan Nath - kumbakonam,இந்தியா
12-மே-202011:24:42 IST Report Abuse
Swaminathan Nath நிதி பற்ற குறை வரும் பொது எல்லா அரசாங்கமும் செய்வது தான், தவறு இல்லை, அங்கிருப்பவர்கள் இந்தியாவிற்கு பொருள் வாங்குவது குறையும்,
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
12-மே-202010:42:22 IST Report Abuse
வாய்மையே வெல்லும் ஜைஹிந்த்து புறம் - அரேபியாவுல வால் ஆட்டினா உருவி ஊறுகாய் போட்டுருவானுக .. இங்க உங்கள மாதிரி தருதலைங்க வெறுப்பு பேச்சல்லாம் எடுபடாது.. இதுக்கே இந்தியாவுல உங்களுக்கு உரிமை போச்சுன்னு அண்டா புளுகு புழுகுறீங்க.. நியாயமா பாஸ்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X