அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் காய்கறி விற்பனை ; கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு

Added : மே 11, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 ரேஷனில் காய்கறி விற்பனை  ; கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு

சென்னை : ''சென்னை மக்களின் தேவையை பொறுத்து, ரேஷன் கடைகளில், காய்கறிகள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு தெரிவித்தார்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின், 'காமதேனு' அங்காடி வளாகத்தில், 14 நடமாடும் காய்கறி கடைகளின் சேவையை, கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு நேற்று துவக்கி வைத்தார்.பின், அவர் கூறியதாவது:ஊரடங்கு காலத்தில், மக்களுக்கு, காய்கறிகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க, மார்ச், 29 முதல், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, தமிழகம் முழுதும், நடமாடும் கடைகள் வாயிலாக, காய்கறிகள் விற்கப்படுகின்றன.

சென்னையில் ஏற்கனவே, 29 நிரந்தர கூட்டுறவு பண்ணை பசுமை கடைகள் உள்ள நிலையில், 35 நடமாடும் கடைகள் வாயிலாக, 231 இடங்களில் காய்கறிகள் விற்கப்படுகின்றன.கோயம்பேடு காய்கறி சந்தை, திருமழிசைக்கு மாற்றப்பட்டு உள்ளதால், காய்கறிகள் விலை அதிகரித்துள்ளதாக செய்தி வெளியானது.இதனால், சென்னையில் தற்போது, கூடுதலாக, 14 நடமாடும் கடைகள் வாயிலாக, 161 இடங்களில் காய்கறிகள் விற்கப்பட உள்ளன.கூட்டுறவு கடைகளில், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கி, குறைந்த விலைக்கு, 27 வகை காய்கறிகள் விற்கப்படுகின்றன.

தமிழகம் முழுதும், நிரந்தர மற்றும் நடமாடும் கடைகள் வாயிலாக, இதுவரை, 8.36 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்கப்பட்டுள்ளன.ரேஷன் கடைகளில், 500 ரூபாய்க்கு, 19 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்கப்படுகிறது. மொத்தம், 10 லட்சம் தொகுப்புகள் விற்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதுவரை, 2.45 லட்சம் மளிகை தொகுப்புகள் விற்கப்பட்டு உள்ளன.இவற்றின் மதிப்பு, 12.29 கோடி ரூபாய். சென்னை மக்களின் தேவையை பொறுத்து, விரைவில், ரேஷன் கடைகளிலும், காய்கறிகள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அமைச்சர் ராஜு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
12-மே-202022:30:35 IST Report Abuse
adalarasan நல்லதுஉடனே செய்யுங்கள். தரமான காய்கள், நியாய விலைக்கு விற்கலாம்?எல்லாம், பாக்கட் செய்து விற்கவேண்டும்
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
12-மே-202021:29:56 IST Report Abuse
Raj ஒன்னும் அவசரம் இல்லை வீதிக்கு வேனில் காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் வரும் என்று பொய் வாக்குறுதி அளித்த மாதிரி தான் பல இடங்களில் அவ்வாறு நடக்கவே இல்லை
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-மே-202013:22:57 IST Report Abuse
Lion Drsekar முதலில் எடையை கண்காணியுங்கள், அதற்க்கென இயங்கும் துறை கம்பெனிகளை மட்டுமே குறிவைத்து ஏதோ கொலைக்குற்றம் செய்தவர்கள் போல் துரத்தி துரத்தி பிடிப்பது போல், தெருக்களில் குறிப்பாக மார்க்கட்டுகளில் விற்கப்படும் தராசுக்கற்களின் தரத்தை ஆராயவேண்டும், மாட்டார்கள், காரணம், வாக்கு வங்கி? மூன்று கிலோ, நான்கு கிலோ என்று விற்கிறார்கள் சரியான எடை என்பது அதில் பாதிகூட இல்லை, காவல் துறையினர்களும் இதே முணுமுணுப்போடுதான் வாங்கிக்கொண்டு செல்கின்றனர், வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X