துறை செயல்பாடு: உதயகுமார் ஆய்வு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

துறை செயல்பாடு: உதயகுமார் ஆய்வு

Added : மே 11, 2020
Share
 துறை செயல்பாடு: உதயகுமார் ஆய்வு

சென்னை : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்ட, அரசாணைகளின் செயல்பாடுகள் குறித்து, அமைச்சர், உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை, எழிலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், வருவாய் நிர்வாக ஆணையர், ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குனர் ஜகந்நாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக, பொதுமக்கள், வியாபாரிகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை, வருவாய் துறை வெளியிட்டுள்ளது. அதேபோல், கொரோனா நோய் பரவல் தடுப்பு தொடர்பாக, பல்வேறு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என, அமைச்சர் ஆய்வு செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X