சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை சடலமாக மீட்பு

Added : மே 11, 2020
Share
Advertisement

உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த, எல்.எண்டத்துாரைச் சேர்ந்த, சாந்தி என்பவர் மகள் மஹாலட்சுமி, 30. திருமணமாகி, இரண்டு மகள், மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக. கணவரை பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வந்தார்.ஓராண்டாக வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டதால், கர்ப்பமடைந்த மஹாலட்சுமிக்கு, 10 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இதனால், மஹாலட்சுமிக்கும், அவரது வீட்டாருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதில், மனமுடைந்த மஹாலட்சுமி, தன் பச்சிளம் குழந்தையுடன், உத்திரமேரூர் அடுத்த மணித்தோட்டம் பகுதி, விவசாய கிணற்றில், நேற்று முன்தினம் மாலை குதித்தார்.தண்ணீரில் தத்தளித்த மஹாலட்சுமியை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உயிருடன் மீட்டனர். கிணற்றில் மூழ்கிய பச்சிளம் குழந்தையை, உத்திரமேரூர் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.கிணற்றில் தண்ணீர் அதிகம் இருந்ததால், குழந்தையை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாக, தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X