சில பகுதிகளில் நோய் தொற்று அதிகரிப்பு தீவிர நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு சில பகுதிகளில் நோய் தொற்று அதிகரிப்பு தீவிர நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு

Added : மே 11, 2020
Share
Advertisement

புதுடில்லி : மத்திய சுகாதார துறை இணை செயலர், லாவ் அகர்வால் கூறியதாவது: 'நாட்டின் சில பகுதிகளில், கொரோனா பரவல், திடீரென அதிகரித்துள்ளது.

அப்பகுதிகளில் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், பரவல் விகிதம் அதிகமாகும்' என, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர், ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். அதனால், அப்பகுதிகளில் தொற்று நோய் பரவலை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம், சமூகப் பரவல் ஏற்படவில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். 'ஆரோக்கிய சேது' செயலியை, 9.80 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதைப் பயன்படுத்தி, கொரோனா பாதித்தோரை எளிதில் அடையாளம் காணலாம்.நோய் அறிகுறி உள்ளோர், மறைக்காமல், அது குறித்து தெரிவிக்க முன் வரவேண்டும்.

இதன் மூலம், கொரோனா பாதிப்பில் இருந்து பிறர் தப்பிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, கொரோனா பாதித்து குணமடைந்தோரிடம் காணப்படும் லேசான அறிகுறிகளால், பிறருக்கு நோய் பரவுவதாக கூறப்படுவதை, மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது. குணமான பின், வீட்டிலும் அவர்கள் தனிமையில் வைக்கப்படுவதால், நோய் பரவலுக்கு அவர்கள் தான் காரணம் என்பதற்கு ஆதாரம் இல்லை என, அது தெரிவித்துள்ளது.


''நாட்டின் சில பகுதிகளில், திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அது சமூக பரவலாக மாறாமல் தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, மத்திய சுகாதார துறை இணை செயலர், லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத வகையில், நேற்று, ஒரே நாளில், 4,213 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, லாவ் அகர்வால் கூறியதாவது: 'நாட்டின் சில பகுதிகளில், கொரோனா பரவல், திடீரென அதிகரித்துள்ளது. அப்பகுதிகளில் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், பரவல் விகிதம் அதிகமாகும்' என, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர், ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.


அதனால், அப்பகுதிகளில் தொற்று நோய் பரவலை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம், சமூகப் பரவல் ஏற்படவில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். 'ஆரோக்கிய சேது' செயலியை, 9.80 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதைப் பயன்படுத்தி, கொரோனா பாதித்தோரை எளிதில் அடையாளம் கண்டு, நோய் பரவலை தவிர்க்கலாம். நோய் அறிகுறி உள்ளோர், மறைக்காமல், அது குறித்து தெரிவிக்க முன் வரவேண்டும். இதன் மூலம், கொரோனா பாதிப்பில் இருந்து பிறர் தப்பிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X