நிரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் துவங்கியது

Added : மே 11, 2020
Share
Advertisement

லண்டன் : வங்கி பண மோசடியில் ஈடுபட்ட, வைர வியாபாரி நிரவ் மோடியை, இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான விசாரணை, பிரிட்டன் நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது.

மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, 49. இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பினார்.ஓராண்டுக்கும் மேல் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி, கடந்த ஆண்டு, மார்ச் 19ல், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் பிடிபட்டார்.அவரை கைது செய்த போலீசார், லண்டனில் உள்ள, 'வாண்ட்ஸ்வொர்த்' சிறையில் அடைத்தனர். நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, லண்டனில் உள்ள, 'வெஸ்ட் மினிஸ்டர்' மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, 2020, மே, 11ல் துவங்கி, ஐந்து நாட்கள் நடைபெறும் என, நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதன்படி, வழக்கு விசாரணை, நேற்று துவங்கியது.'கொரோனா' அச்சுறுத்தல் காரணமாக, பிரிட்டன் முழுதும், முழு அடைப்பு அமலில் உள்ளதால், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், விசாரணை துவங்கியது. குற்றவாளி நிரவ் மோடி, வெள்ளை சட்டை, கறுப்பு கோட் அணிந்து, 'வாண்ட்ஸ்வொர்த்' சிறையில் இருந்து, கேமரா வழியாக, நீதிமன்றத்தில் ஆஜரானார்.


இந்திய அரசு தரப்பில், வழக்கறிஞர் ஹெலன் மால்கம் ஆஜராகி, வாதங்களை முன் வைத்தார். இந்த வழக்கு விசாரணை, இன்னும் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X