தொழிலாளர், ஊழியர்கள் போலீசார் மீது அதிருப்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர், ஊழியர்கள் போலீசார் மீது அதிருப்தி

Added : மே 11, 2020
Share

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி பகுதியில், அடையாள அட்டை காண்பிக்கும் தொழிலாளர்கள், ஊழியர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி, 'சிப்காட்' மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் என, 320 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.தொழிற்சாலைகள் அனைத்தும், 50 சதவீத தொழிலாளர்கள், ஊழியர்கள் கொண்டு இயங்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.அதன்படி, கும்மிடிப் பூண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தொழிலாளிகள், ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்து கொண்டு வேலைக்கு சென்று வருகின்றனர்.ஆனால், கும்மிடிப்பூண்டி பகுதியில், குறிப்பாக, சிப்காட் நுழைவுவாயலில், போலீசார் தடுப்பு அமைத்து, அவ்வழியாக சென்று வரும், இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது, ஊரடங்கு வழக்கு போட்டு வருகின்றனர்.பல சமயங்களில், அடையாள அட்டை காண்பிக்கும் தொழிலாளர்களையும், ஊழியர்களையும் விட்டு வைக்காமல், ஊரடங்கு வழக்கு பதிகின்றனர்.

மேலும், தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண் ஊழியர்களை, இருசக்கர வாகனத்தில் ஏற்றி வருவோர் மீதும், ஊரடங்கு வழக்கு போடுவதை போலீசார் வழக்கமாக கொண்டுஉள்ளனர்.இதனால், போலீசார் மீது, தொழிலாளர், ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகம் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X