பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்.,களில் பணம் இல்லை

Added : மே 11, 2020
Share
Advertisement

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி உள்ள தொழிற்சாலைகளில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும், 5 முதல், 10 வரை, சம்பளம் பெற்று வருகின்றனர்.

வங்கி கணக்கில் வரும் சம்பளத்தை, கும்மிடிப்பூண்டி நகர் பகுதியில் உள்ள, ஏ.டி.எம்., மையங்களில், எடுப்பது வழக்கம்.கும்மிடிப்பூண்டி நகர் பகுதியில், 20க்கும் மேற்பட்ட, ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. அனைத்து மையங்களிலும், மூன்று நாட்களாக பணம் நிரப்பப்படாமல் இருப்பதால், பணமின்றி தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில், அவசர தேவைக்கு, பணம் எடுக்க முடியாமல், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அனைத்து, ஏ.டி.எம்., மையங்களிலும், உடனடியாக பணம் நிரப்பப்பட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X