பொது செய்தி

தமிழ்நாடு

இயல்பான சூழலுக்கு மாறிய கூடலூர்; கொரோனா கட்டுப்பாடு மறந்து போச்சு

Added : மே 11, 2020
Share
Advertisement
 இயல்பான சூழலுக்கு மாறிய கூடலூர்; கொரோனா கட்டுப்பாடு மறந்து போச்சு

கூடலுார்:கூடலுாரில் வாகன போக்குவரத்து; மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாடு மறந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.அரசின் உத்தரவுபடி, கூடலுாரில் கடைகள் திறந்து செயல்பட துவங்கியுள்ளன. அதேபோன்று வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், வாகன போக்குவரத்து அதிகரித்ததால், அதனை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் கடும் சிரமப்படுகின்றனர்.சாலை ஓரங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த பல வாரங்களாக போலீசார் கட்டுப்பாட்டில் இருந்த சூழ் நிலை மாறியுள்ளது. இந்த திடீர் மாற்றம், சுகாதாரத்துறையினர், போலீசார் மத்தியில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சத்தை அதிகரிக்க செய்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X