துாய்மை பணியாளர்களுக்கு அரிசியுடன் காய்கறி தொகுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்களுக்கு அரிசியுடன் காய்கறி தொகுப்பு

Added : மே 11, 2020
Share
கோத்தகிரி;கோத்தகிரி பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, அரிசி மற்றும் காய்கறி தொகுப்புடன், மதிய உணவு வழங்கப்பட்டது.கொரோனா நோய்த்தொற்று காரணமாக, மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையில், கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், கிருமி நாசினி மருந்து தெளித்து, துாய்மை பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.இவர்களது
 துாய்மை பணியாளர்களுக்கு அரிசியுடன் காய்கறி தொகுப்பு

கோத்தகிரி;கோத்தகிரி பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, அரிசி மற்றும் காய்கறி தொகுப்புடன், மதிய உணவு வழங்கப்பட்டது.கொரோனா நோய்த்தொற்று காரணமாக, மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையில், கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், கிருமி நாசினி மருந்து தெளித்து, துாய்மை பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.இவர்களது பணியை ஊக்குவிக்கும் விதமாக, குன்னுார் தொகுதி எம்.எல்.ஏ., சாந்தி ராமு, அனைவருக்கும் ஐந்து கிலோ அரிசியுடன், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி தொகுப்பு வழங்கினார். மேலும், மூத்த துாய்மை பணியாளர்கள் பலருக்கு, சால்வை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இதில், பேரூராட்சிகளின் துணை இயக்குனர் மனோரஞ்சிதம், பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X