கொரோனா வைரஸ் எதிரொலி

Added : மே 11, 2020
Share
Advertisement

நியூயார்க் : கொரோனா வைரஸ் பரவலால், சுற்றுலா துறைக்குத் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தாண்டில், சுற்றுலாத் துறை, 60 - 80 சதவீதம் வரை, வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், இப்போது உச்சத்தை அடைந்துள்ளது. சீனாவை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா, அதையடுத்து, அமெரிக்காவையும் புரட்டி போட்டது. இப்போது, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், தன் வேலையை காட்டத் துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால், அனைத்து தொழில் துறைகளும் முடங்கினாலும், சுற்றுலா துறை கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. கோடைக் காலங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர், உள்நாடுகளுக்குள் சுற்றுலா செல்வோர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தங்கள் பயண திட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

சுற்றுலா துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, உலக சுற்றுலா அமைப்பு நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில், சர்வதேச அளவில் சுற்றுலாத் துறை, 60 - 80 சதவீதம் வரை, வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தாண்டு முழுவதும் கணக்கிட்டால், வீழ்ச்சி, 60 - 80 சதவீதம் வரை, அதிகரிக்கும். கடந்தாண்டு சுற்றுலா துறைக்கு ஏற்பட்ட வருவாயை கணக்கிட்டு, இந்த வீழ்ச்சி சதவீதம் மதிப்பிடப்பட்டுள்ளது. மார்ச்சில் தான், பல நாடுகளில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், அந்த மாதத்தில் மட்டும், 57 சதவீதம் அளவுக்கு சுற்றுலா துறைக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்து முடக்கம், உள்நாடுகளில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு, மக்களுக்கு ஏற்பட்ட பயம் ஆகியவை காரணமாகவே, சுற்றுலாத் துறை வீழ்ச்சி அடைந்துள்ளது. சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள, 10 கோடிக்கும் அதிகமானோரின் வேலை வாய்ப்புகள், கேள்விக்குறியாகி உள்ளதுடன். 68 லட்சத்து, 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X