சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நேரத்தில் விதிமீறல் 48 நாளில் 4.54 லட்சம் பேர் கைது

Added : மே 11, 2020
Share
Advertisement

சென்னை : ஊரடங்கு நேரத்தில், விதி மீறலில் ஈடுபட்டதாக, 48 நாட்களில், 4.54 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில், மார்ச், 25ல், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. விதிமீறல்களில் ஈடுபடுவோர், ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் சட்டப் பிரிவுகளில் கைது செய்யப்படுவர் என, போலீசார் எச்சரித்தனர்.இதையடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து, நேற்று காலை, 9:00 மணி வரையிலான, 48 நாட்களில், போலீசார், 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்; 4.54 லட்சம் பேரை கைது செய்துள்ளனர்.

விதிகளை மீறி வெட்டியாய் ஊர் சுற்றியவர்களிடம் இருந்து, 4.91 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது; 3.75 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில், 96 ஆயிரம் வாகனங்களை, அதன் உரிமையாளர்களிடம், போலீசார் ஒப்படைத்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். வாகன சோதனை தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X