பொது செய்தி

தமிழ்நாடு

காணொளியில் செயற்குழு கூட்டம்

Added : மே 11, 2020
Share
Advertisement

குன்னுார்:தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின், நீலகிரி மாவட்ட செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டது.மாவட்ட தலைவர் தினகரன் தலைமை வகித்தார். பொருளாளர் ஜெயசீலன் வரவேற்றார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது, 59 ஆக உயர்த்திய அரசாணையை வாபஸ் பெற வேண்டும்;ஆசிரியர்களின் அகவிலை படி உயர்வை, 18 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தது மற்றும் ஈட்டிய விடுப்பு சரண் தடை செய்தது, வருங்கால நிதியின் வட்டி, 7.1 சதவீதமாக குறைத்ததற்கு, கண்டனம்;ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கட்டாய நிர்வாக மாறுதலை, அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயலாளர் சுனில் குமார், கோரிக்கைகள் குறித்து பேசினார். துணை தலைவர் பத்மநாபன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X