ஊர் திரும்புவோரால் அதிகரிக்கும் தொற்று

Added : மே 11, 2020
Share
Advertisement

புதுடில்லி : பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வந்த, பீஹாரைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், அங்கு, 'கொரோனா'வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, திடீரென அதிகரிக்க துவங்கி உள்ளது.

பீஹார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பிழைப்புக்காக வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த தொழிலாளர்களை, அந்தந்த மாநில அரசுகள், ரயில் மற்றும் பஸ் மூலம், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகிறது. பீஹாரில் இருந்து மட்டும், 40 முதல், 45 லட்சம் தொழிலாளர்கள், பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. ஊரடங்கு தளர்வில், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு, அறிகுறிகள் எதுவும் இன்றி, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீஹாரில், கடந்த மாதம், 14ல், 66 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது, அந்த எண்ணிக்கை, 600ஐ கடந்து விட்டது. இம்மாதம், 5 முதல், 10 வரை, 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், பெரும்பாலானோர், வேறு மாநிலங்களில் இருந்து பீஹார் திரும்பிய தொழிலாளர்கள்.குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இருந்து, தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு, ஒடிசா சென்ற ரயில், அங்குல் மாவட்டத்தை அடைந்தபோது, 20 தொழிலாளர்கள், ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றனர்.

கிட்டத்தட்ட, 28 நாள் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிக்கவே, அவர்கள் ரயிலில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள், ஏழு பேரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். அதேபோல, தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, 30 தொழிலாளர்கள், பஸ்சில் ஒடிசா அனுப்பப்பட்டனர்.அதில், 15 பேர், கட்டாக்கிலேயே இறங்கி, வீடுகளுக்கு தப்பி செல்ல முயன்றனர். அதில், ஆறு பேரை அதிகாரிகள் பிடித்தனர். மீதமுள்ளவர்கள், தனிமை முகாம் வந்தடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X