சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எல்லை கட்டணத்தால் திணறும் வாகனங்கள்

Added : மே 11, 2020
Share
Advertisement

சென்னை : மாநில எல்லை பகுதிகளில், கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகனங்கள், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து, பிற மாநிலங்களுக்கு செல்லும் வணிக வாகனங்களுக்கு, பிற மாநில இயக்கக் கட்டணமாக, 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது தவிர, பிற மாநில எல்லைகளில் உள்ள, சோதனை சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்துக்கு உரிய ரசீதுகள் வழங்கப்படவில்லை; மாநில எல்லைகளில், குறைவான ஆட்களை வைத்து கட்டணம் வசூலிப்பதால், அவசர தேவைகளுக்காக செல்லும் வாகனங்கள், மணிக்கணக்காக காத்திருக்கும் நிலைமை உள்ளது என, புகார் கூறப்படுகிறது.

இதுமட்டுமன்றி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமிருப்பதால், கர்நாடக மாநில எல்லை பகுதியான, ஓசூர்; ஆந்திர எல்லை பகுதிகளான நெல்லுார், திருத்தணி, சித்துார் உள்ளிட்ட இடங்களில், தமிழக வாகனங்களுக்கு கெடுபிடி காட்டப்படுகிறது. அதேநேரம், கேரளா வாகனங்களுக்கு, உடனடி அனுமதி வழங்கப்படுகிறது.இது குறித்து, தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க செயலர், ஜூட் மேத்யூ கூறியதாவது: தமிழகத்தில் வழங்கப்படும், 'இ- - பாஸ்'களை, பிற மாநிலத்தவர்கள் மதிப்பதில்லை. அதனால், பல மணி நேரம் காத்திருக்க வைக்கின்றனர்.

அத்துடன், எல்லையோர சோதனை சாவடிகளில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. ஓட்டுனர்கள், பல மணி நேரம் காத்திருக்கும்போது, உணவு கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். மேலும், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கான இ- - பாஸ் வழங்குவதில், தெளிவான நெறிமுறைகள் இல்லாததால், நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற குறைகளை களைய, தமிழக போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X