எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அரசின் அடுத்தடுத்த உத்தரவுகளால் மக்கள் குழப்பம்: மக்களே தங்களை பாதுகாத்து கொள்ள சொல்கிறதா அரசு?

Updated : மே 12, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
'என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது...' என்ற பாடல் வரிகளுக்கேற்ப, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், அரசின் உத்தரவுகள் அமைந்துள்ளன. தினம் தினம் ஒரு அறிவிப்பு வெளியாவதால், அதிகாரிகள் மட்டுமின்றி, மக்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், கொரோனா நுழைந்த போது, அதன் தாக்கம் குறித்த தகவல்கள், மக்களை பீதி அடைய வைத்தன. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், தொட்ட இடத்தில்,
TN,TamilNadu,coronavirus,covid19

'என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது...' என்ற பாடல் வரிகளுக்கேற்ப, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், அரசின் உத்தரவுகள் அமைந்துள்ளன. தினம் தினம் ஒரு அறிவிப்பு வெளியாவதால், அதிகாரிகள் மட்டுமின்றி, மக்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், கொரோனா நுழைந்த போது, அதன் தாக்கம் குறித்த தகவல்கள், மக்களை பீதி அடைய வைத்தன. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், தொட்ட இடத்தில், மற்றவர்கள் கை வைத்தாலே, நோய் தொற்று தாக்கும் என்றனர். நோய் பரவலை தடுக்க, மார்ச், 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கினர்.

ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானால், அவர் வசித்த தெரு மட்டுமின்றி, சுற்றியிருந்த தெருக்களும், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டன. மேலும், அவர் வசித்த தெருவில், அனைவருக்கும் நோய் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக, அந்த தெருவை சுற்றி, 5 கி.மீ., சுற்றளவுக்கு, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த, அரசு உத்தரவிட்டது.

நோய் தொற்றுக்கு உள்ளானவர், மருத்துவமனையில், 14 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும்; நோய் தொற்று நீங்கிய பின், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என, அரசு அறிவித்தது. நோய் தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்ததும், அரசு உத்தரவுகள் மாற்றிக் கொள்ளப்பட்டன. தற்போது, நோய் தொற்று பாதித்தவர் வீட்டை மட்டும், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்தால் போதும். அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டும், பரிசோதனை செய்தால் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரும், மூன்று அல்லது நான்கு நாட்களில், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சில மருத்துவமனைகளில், அனுப்ப மறுக்கின்றனர். நோய் அறிகுறி இல்லாதவர்கள், வீட்டிலே தங்களை தனிமைப்படுத்தி கொண்டு, சிகிச்சை பெறலாம் என, அரசு அறிவித்துள்ளது. நோய் தொற்று அதிகம் இல்லாதபோது, கெடுபிடிகள் அதிகம் இருந்தது. தற்போது, நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கெடுபிடிகள் தளர்த்தப்படுகின்றன. இதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.

ஆரம்பத்தில், வேகமாக பரவும் என்று கூறப்பட்ட, கொரோனா நோய், தற்போது பரவுவதை நிறுத்திக் கொண்டதா என்றும் தெரியவில்லை. அரசின் திடீர் உத்தரவு, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் தெருவை, முழுமையாக அடைக்க வேண்டாம் என்ற உத்தரவை, இன்னமும் போலீசார் அமல்படுத்தவில்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதியில், அவர்களின் கெடுபிடி தொடர்கிறது. 'கட்டுப்பாடுகளை தளர்த்த, எங்களுக்கு உத்தரவு வரவில்லை' என்கின்றனர், அடுத்தடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள்.

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்களின், தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி எதுவும் செய்யப்படவில்லை. ரேஷன் பொருட்கள் கூட வழங்கப்படவில்லை. தனிமைப்படுத்தப்பட்டோர் தங்கியுள்ள முகாம்களில், உணவு முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்யாமல், சில இடங்களில், அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசு அனைத்து கெடுபிடிகளையும் தளர்த்தி விட்டது. இனி, மக்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை, அரசின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.


தொழிலாளர்கள் நிலை பரிதாபம்!

கூலி தொழிலாளர்கள் ஏராளமானோருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பிய பிறகும், 14 நாட்கள், தனிமையில் இருக்க வேண்டும் என, சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அவர்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க, அவர்களுக்கு அரசு தரப்பில், எந்த உதவியும் செய்யப்படவில்லை.

ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பொருட்கள், ஒரு சில நாட்களே வந்த நிலையில், மற்ற நாட்களில், உணவுக்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், இனிமேல், வேலைக்கு செல்ல வாய்ப்புண்டு. நோய் பாதிப்புக்குள்ளானோர், அரசு தளர்வுகளை அறிவித்த பிறகும், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் உள்ளனர். அவர்களின் வயிற்றுப்பசி போக்கவாவது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
13-மே-202000:26:12 IST Report Abuse
unmaitamil சிறு குழந்தை நடக்க தொடங்கும்போது, பெற்றோரின் கைபிடித்து நடக்கும். பயிற்சி பெறும். சிறிது வளர்ந்தவுடன் பெரியோரின் கை பிடித்து வீதியை கடக்கும். பின் மேலும் வளர்ந்தவுடன், மற்றவர் உதவி இன்றி தானே தன்னை காப்பாற்றிக்கொள்ளும் . அடுத்தவரையும் காப்பாற்றும் . அதுபோல்தான் இன்றைய நாட்டின் நிலைமையும். கோரோவின் பாதிப்பு என்ன ??? எப்படி நம்மை நாமே வருமுன் காப்பது, வந்தபின் காப்பது என்று இந்த இரண்டு மாதத்தில் அரசு எடுத்து சொன்ன செய்திகளை தெரிந்திருக்க, அறிந்திருக்க வேண்டும். . இனியும் காரோண விஷயத்தில், பெற்றோரின் கைபிடித்து நடக்க விரும்பும் குழந்தை போல், எப்போதும் எல்லாவற்றிற்கும் அரசையே எதிர்பார்த்து வாழக்கூடாது, குறை சொல்லக்கூடாது . இனி நம்மை நாமே பாதுகாத்து கொள்ளவேண்டும்
Rate this:
Cancel
Rajendran B - Madurai,இந்தியா
12-மே-202022:16:03 IST Report Abuse
Rajendran B அம்மையார் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் தலைமை எவ்வளவு முக்கியம் என்பதை தற்போதைய அரசு உணர்த்தி வருகிறது. ஆரம்பத்திலேயே கோயம்பேடு சந்தையை வெளி இடத்திற்கு மாற்றி இருந்தால் இந்த அளவிற்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போயிருக்காது. முழுக்க முழுக்க அரசின் நிர்வாக திறமை இன்மையை இது காட்டுகிறது. எதிர்கட்சிக்கு பயந்து நடக்கும் அரசு, பொறுப்பற்ற எதிர்க்கட்சி என தமிழகத்தின் நேரம் தற்போது சரியில்லை. காப்பாற்ற யார் வருவார்களோ ஆண்டவா
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
12-மே-202021:21:28 IST Report Abuse
vbs manian லக்ச்சக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்தியம் பார்த்து பின் தனிமை படுத்தப்பட்ட காலத்தில் உணவும் வழங்க வேண்டும் என்றல் எந்த அரசாளும் முடியாது. அந்தளவுக்கு நிதி இல்லை. இதுதான் நிதர்சன உண்மை. அதனாலதான் மெதுவாக கழட்டி விடுகிறார்கள். எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமை எல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்துவிட்டேன் என்று அருணகிரி பாடியதுதான் நினைவுக்கு வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X