பொது செய்தி

தமிழ்நாடு

தென்மேற்கு பருவ மழை 16ம் தேதி துவங்க வாய்ப்பு

Added : மே 11, 2020
Share
Advertisement

சென்னை : 'தென்மேற்கு பருவமழை, வரும், 16ம் தேதி, அந்தமானில் துவங்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. நாடு முழுதும் உள்ள, நீர் ஆதாரங்களை நிரப்பும் அமுதசுரபியாக, தென்மேற்கு பருவ மழை கருதப்படுகிறது.

வங்க கடலில், அந்தமான் பகுதியில் துவங்கி, கேரளா வழியாக, தமிழகத்துக்குள் நுழைந்து, காஷ்மீர் வரை பரவி, நான்கு மாதங்கள் மழை கொட்டும்.ஒவ்வோர் ஆண்டும், ஜூன், 1ல் தென்மேற்கு பருவ மழை துவங்குவது வழக்கம். இந்த ஆண்டும், அதேபோலத்தான் துவங்கும் என, ஏப்ரலில் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தற்போது, இரண்டு வாரங்கள் முன்கூட்டியே, மழை துவங்குவதற்கு சாதகமான அம்சங்கள், இந்திய பெருங்கடலில் ஏற்பட்டு உள்ளன.அரபி கடலில் இருந்து, வலுவான ஈரப்பதம் மிகுந்த காற்று வீசுவதால், தென்மேற்கு பருவ மழை அறிகுறி துவங்கி விட்டதாக, இம்மையம் கூறியுள்ளது.

இந்திய மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தென்மேற்கு பருவமழை, வரும், 16ம் தேதி, தெற்கு அந்தமான் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், துவங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதையடுத்து, வங்க கடலின் தென்மேற்கு பகுதி மற்றும் மத்திய பகுதிக்கு இடையே, அந்த மான் அருகே, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த பகுதி, அரபிக்கடல் பகுதி களில் இருந்து, மேற்கு கிழக்காக வீசும் காற்றால், கூடுதலாக வலுப்பெற்று, புயலாக மாறி, பருவ மழையை துவக்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பருவநிலை மாற்றமும், உலக சூழ்நிலைகளை மாற்றும் என்பதால், கொரோனாவின் மோசமான பாதிப்புகளை, தென்மேற்கு பருவ மழை மாற்றலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாட்டின் அனைத்து வகை பொருளாதார பிரச்னைகளுக்கும், இந்த மழை தீர்வு கொடுக்கும் என்றும், நம்பப்படுகிறது.வருகிறது, 'அம்பான்'காற்றழுத்த பகுதி, புயலாக மாறினால், வங்க கடலின் மேற்கு பகுதியில் உள்ள, சென்னையை நோக்கி வந்து, பின் கடலுக்குள்ளேயே, வடமேற்காக திரும்பி, காக்கிநாடாவை நோக்கி சென்று, கரை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு, 'அம்பான்' என, பெயர் வைக்கப்படும்; இது, தாய்லாந்து நாடு பரிந்துரைத்த பெயர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X