பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை

Added : மே 11, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் 10 நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதில் விவசாயிகள் கோடை உழவு செய்துள்ளனர். நேற்று காலை மீண்டும் மழை பெய்தது. கோடை பட்டத்தில் சிறு தானியங்கள் பயிர் செய்வதற்கு ஏதுவாக நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனை பயன்படுத்தி சிறு தானியங்கள் பயிரிட விவசாயிகள் ஆயத்தப்பணிகளை செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பத்தால் தவித்த மக்கள் நேற்று மழையால் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

* பரமக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்று பெய்த மழையால் பரமக்குடியில் பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் நகராட்சி, சுகாதாரத்துறையினர் மழை நீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*கடலாடியில் கொரோனா ஊரடங்கால் காய்கறி மார்க்கெட் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது. சாயல்குடி, கடலாடி சுற்றுவட்டார பகுதிகளில் காலை 6:00 முதல் 7:00 மணிக்கும்காலை 11 முதல் மதியம் 12:30 மணிக்கும் கோடை மழை பெய்தது. கடலாடி அரசுப்பள்ளி மார்க்கெட்டில் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் தவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X