சீனாவிடமிருந்து நெருக்கடியா? உலக சுகாதார நிறுவனம் மறுப்பு!

Added : மே 11, 2020
Share
Advertisement

பெர்லின் : கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை வெளியிடாமல் இருக்கும்படி, சீனாவிடமிருந்து தங்களுக்கு நெருக்கடி தரப்பட்டதாக வெளியான தகவலை, உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் கூறியதாவது: ஜெர்மன் நாட்டிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில், கடந்த ஜனவரி, 21ல், சீன அதிபர் ஜின்பிங், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக எழுதப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவக் கூடியது என்ற தகவலை அறிவிக்க வேண்டாம் என, அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவை மிகப் பெரிய கொள்ளை நோய் என, அறிவிக்க வேண்டாம் என, சீன அதிபர் கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜெர்மன் உளவுத் துறை அதிகாரிகள் மூலமாக, இந்த தகவல் சேகரிக்கப்பட்டதாக, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது; இது, ஆதாரமற்ற குற்றச்சாட்டு.இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், உலக சுகாதார நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், கொரோனாவுக்கு எதிரான உலக நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையையும் சீர்குலைத்து விடும். அந்தப் பத்திரிகையில் குறிப்பிட்டது போல், சீன அதிபருடன், நான் போனில் பேசவில்லை. கொரோனா வைரஸ், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தகவலை, ஜன., 20ம் தேதியே சீனா அறிவித்து விட்டது.

இதற்கு இரண்டு நாட்கள் கழித்து, சீனாவின் வூஹான் நகரில், கொரோனா வைரஸ், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இது தொடர்பாக, இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. கொரோனா வைரஸ், ஒரு கொள்ளை நோய் என, பிப்., 11ல், உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X