பொது செய்தி

தமிழ்நாடு

மலேரியா ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

Added : மே 11, 2020
Share
Advertisement

புதுப்பேட்டை : புதுப்பேட்டையில் மலேரியா பணியாளர்கள் இருவர் உட்பட, 67 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர்.சென்னை, ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட புதுப்பேட்டை, 63வது வார்டு அலுவலகத்தில் பணிபுரிந்த, 52, 55 வயதுடைய இரு மலேரியா பணியாளர்கள், கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்டனர்.ராயபுரம் மண்டல சுகாதார அதிகாரிகள், இருவரையும் ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில், நேற்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.அனைத்து பகுதிகளையும் தீயணைப்பு வாகனங்கள் மூலம், கிருமி நாசினி தெளித்து, நேற்று, 'சீல்' வைத்து, கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வந்தனர்.ராயபுரம் மண்டலத்தில், நேற்று மட்டும், 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X