பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சம் நீங்கியது :புதுக்காலனிக்கு 'விடுதலை'

Added : மே 11, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில், புதுக்காலனியை சேர்ந்த ஐந்து வயது சிறுவனுக்கு, கடந்த ஏப். 13 ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டதால், சிறுவனும், அவரது தாயாரும் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புதுக்காலனி பகுதிக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.பின், சிறுவனின் தாயார் மற்றும் புதுக்கலானியில் தனிமைப்படுத்தப்பட்ட தந்தை உள்பட 138 பேருக்கு, கொரோனா தொற்று மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், 14 நாட்கள் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வந்தனர். இதனை தொடர்ந்து, ஐந்து வயது சிறுவன் குணமடைந்து வீடு திரும்பியதும், புதுக்காலனி பகுதி திறக்கப்பட்டது.பின், 28 நாட்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற காரணத்தில் மீண்டும் புதுக்காலனி பகுதி அடைக்கப்பட்டு, கண்காணித்து வந்தனர். தடுப்பு அமைக்கப்பட்டு, 28 நாட்கள் நிறைவு பெற்றதால், 'சீல்' வைக்கப்பட்ட புதுக்காலனி பகுதியை சுகாதாரத்துறையினர் திறந்துவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X